பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்

சரியை கிரி'யா யோகர் சாலோக சாமீப, உருவுவமை யின ராக உதவுதுமெம் முடனாகும், பெருகியஞா னிகள் எம்மைப் பெற்றார்போக் கற்றாரே' எனவும், சிலதருமோத் தரம்,"இருவினை உணர்ந்த புத்தரவர்முதல் இகலும் வாத, தெரிசனம் அனைத்தும் சேர்ந்தார் சிலசமயத்தைச் சேர்வார் பொருவிவி புகன்ற வாக்கிற் கருமநன் னெறியும் புக்கே, விரவுவர் ஞான யோகம் விடுவர்மெய் அடைவர் மெய்யே; :ள்டுத்ததோர் ஆக்கை தன்னின் இருண்மல உத்தி தன்னைத் தடுத்தருள் சைவ நூலின் சாதன மதனைத் தள்ளி, விடுத்து i றற்ற நூலின் சாதனம் விரும்பு வார்முன், அடுத்த ஆரமுதம் விட்டுப் புற்கையா தரிப்பா ரன்றேல' எனவும் வருமாறு காண்க. - -

இதுகாறும் கூறியவாற்றால், சைவ சித்தாந்தத்தன்றிப் பரமுத்தி சித்தியாது என்பதும், அப்பரமுத்திக்குச் சாதனம் சிவஞானமே என்பதும், அச் சில ஞானத்தைப் பயப்பன சரியை முதலிய மூன்றுமே என்பதும், வேதத்துள் விதித்த வேள்விமுதலியன் எல்லாம் அநித்தியமாகிய காமியங்களைப் பயப்பன என்பதும் பெறப்பட்டன. வேள்வி முதலியன ஞானத்தைப் பயவாமை மாத்திரையே அன்றி, தீவினை போல அது நிகழ ஒட்டாது தடைசெய்து நிற்றலும் உடையனவேயாம்.ஆதலால் தீவினைகள் இருப்பு விலங்கும் வேதத்துள் விதித்த வேள்வி முதலிய நல்லினைகள் பொன் விலங்கும் போலத் தம்முட் சமப்படுத்தி உணர்தற் பான்மையை என்க. வேள்வி முதவிய தருமங்களின் பயனா கிய இன்பம் முன் பசித்து உண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப்போலும். அவ்வேள்வி முதலியனபோல அனுபவமாத்திரையாற் கெடுதல் இன்றி மேன்மேல் முறுகி வளர்வனவாகிய சரியை கிரியை யோகங் க்ளால் எய்தப்படும் சிவஞானம் பசித்து உண்டு பின்னும் புசித்தல் இல்லாத தேவர்களுக்கு அவ்வமுத உண்டியாலாய பயனைப்போலும் அவ்வமுதஉண்டி நரை திரை மூப்பின்றி