பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு - 233.

பொங்கும்-அழகு பொங்கி எழும். மா-பெருமை யைப் பெற்ற மறை-நான்கு வேதங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். புற்று-பாம்புப் புற்றை. இடம்-தாம் எழுந்தருளும் இடமாக. கொண்டவர்-கொண்ட வன்மீக நாதரும். எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். ஆகி-வியாபித்தவராகி. இருந்தவர்-இருந்த வன்மீக நாதருடைய. பூசனைக்கு-பூசைக்காக. அங்கண்அந்தத் திருவாரூரில். வேண்டும்-இன்றியமையாமல் இருக் கும். நிபந்தம்-அறக்கட்டளைகளை; ஒருமை பன்மை மயக்கம். ஆராய்ந்து-ஆராய்ச்சி செய்து, துங்க-பரிசுத்த மாகிய ஆகமம்-சைவாகமம். சொன்ன-விதித்த முறை. மையால்-முறையின்படி. உளான்-அமைத்திருக்கிறவன் மனுநீதிச் சோழன்; இடைக்குறை.

எங்கும் ஆகி இருந்தவர்: பூமியும் விண்ணும் உடன் பொருந்தச் சீதமும் வெம்மையு மாகிச் சீரொடு நின்ற எம் செல்வர், ’’, பல்கதிரோன் மதிபார் என்று நீர் தீக்காலும் மேலை விண்ணிய மான னோடு மற்று மாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்று

மாகி. தீயொடு நீருடன் வாயுவாம் தெரியில் வானு மாம்.’’, நீருளான் தீயுளான் அந்த ரத்துள்ளான் நினைப் பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் ஊருளான்., 'புவி

முதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்க் கரணம் நான்காய் அவையவைசேர் பயனுருவாய் அல்ல உருவாய் நின்றான்., 'விண்ணாகி மண்ணோடெறி காற்றுமாய் ஆதியாகி நின்றா னும்.’’, ‘மண்ணொடுநீர் அனல்காலொ டாகாயம் மதி: இரவி எண்ணில் வருமிய மானன் இகபரமும் எண்டிசையும் பெண்ணினோடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேரா

ளன்.", நிலம்நீரொ டாகாசம் அனல்காலாகி நிறைந்து புலம் நீர்மை புறம்கண்டார். , பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்.’’, 'பனிமதி ஆகாசம் ஒரும் வாயுவும் ஒண்கனல்

வேள்வியிற் றலைவனுமாய் நின்றார். , மண்ணர் நீரர்