பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு - 237

மாணிக்கத்தைப் போன்ற வயிற்றிலிருந்து ஒரு புதல்வன் பெருமையைப் பெற்ற சிங்கக்குட்டியைப் போன்றவன் பிறந்தான். பாடல் வருமாறு:

'அறம்பொருள் இன்ப மான

அறநெறி வழாமற் புல்லி மறம்கடிங் தரசர் போற்ற

வையகம் காக்கும் நாளில் சிறந்தநல் தவத்தால் தேவி

திருமணி வயிற்றில் மைந்தன் பிறந்தனன் உலகம் போற்றப்

பேரரிக் குருளை அன்னான்.'

அறம்-தருமம். பொருள்-செல்வம். இன்பம்-மனைவி யோடு கூடிப் பெறும் இன்பம். ஆன-ஆகிய மூன்றையும். அறநெறி-தருமத்தின் வழியிலிருந்து. வழாமல்-தவறாமல். புல்லி-மனுநீதிச் சோழன் அடைந்து. மறம்-பாவச் செயல் களை; ஒருமை பன்மை மயக்கம். கடிந்து-போக்கிவிட்டு. அரசர்-வேறு நாடுகளை ஆட்சி புரியும் மன்னர்கள்; ஒருமை பன்மை மயக்கம். போற்ற-தன்னை வாழ்த்தி வணங்கும் வண்ணம். வையகம்-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்களை இட ஆகுபெயர். காக்கும்-ஆட்சிபுரிந்து பாது தாக்கும். நாளில்-காலத்தில். சிறந்த-சிறப்பை அடைந் ததும்; வினையாலணையும் பெயர். நல்-நல்லதும் ஆகிய. தவத்தால்-முன்பிறவியில் புரிந்த தவத்தின் பயனால்; ஆகு பெயர். தேவி-அந்தச் சோழமன்னனுடைய பட்டமகிஷி யின். திரு-அழகிய. மணி-மாணிக்கத்தைப் போன்ற. வயிற்றில்-வயிற்றிலிருந்து உருபு மயக்கம். மைந்தன்ஒரு புதல்வன். பேர்-பெருமையைப் பெற்ற. அரிக்குருளைசிங்கக்குட்டியை. அன்னான்-போன்றவன். உலகம்-உலகத் தில் வாழும் மக்கள் இடஆகு பெயர். போற்ற-வாழ்த்தும் வண்ணம். ப்:சந்தி. பிறந்தனன்-உதித்தான். மணி வயிறு: 'மன்னுடிகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாழ்த்