பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 - பெரிய புராண விளக்கம்

ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர், விண்னாகி மண்ணாகி.’’, 'பூதங்கள் தோறும் நின்றாய். ’’, பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் பட ரொளிப் பரப்பே, நீருறு தியே. , பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே.’’ என்று மாணிக்கவாசகரும், அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்ததெது., 'பார்க்குமிடம் எங்கும்.ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. , எங்கனும் வியாபி நீ.', விண்ணே வினே தியாம் பூதமே. அண்ட பகிரண்டமும் அடங்கஒரு நிறைவாகி ஆனந்தமான பரமே”, “எங்கும்நிறை கின்றபொருளே.', சர்வபரி பூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே. ’’, 'மண்னொடைந்தும் வழங்குயிர் யாவுமே அண்ண லே நின் அருள்வடி வாகுமே. , வடிவெலாம் நின்வடிவென.’’, 'பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின் சீராக நிற்கும் திறம்கண்டாய்.', 'அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக் கப்பாலும் கொண்ட நின்னை. ’’, ‘மண்ணாதி பூதமெல்லாம் வைத்திருந்த நின்நிறைலை.", எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் வியாபகமாய் உள்ள ஒன்றை.', எங்கெங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்றித் தங்கும் தனிப்பொருளை.', அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார்' என்று தாயுமானவரும் பாடியருளிய வற்றைக் காண்க.

அடுத்து உள்ள 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'மனுநீதிச் சோழ மன்னன் அறம், பொருள், இன்பம் என்பவற்றைத் தரும வழியிலிருந்து தவறாமல் அடைந்து பாவச் செயல்களைப் போக்கி மற்ற நாடுகளை ஆட்சிபுரியும் மன்னர்கள் வாழ்த்துக்களைக் கூறிப் பாராட்டும் வண்ணம் உலகத்து மக்களைப் பாதுகாத்து வரும் காலத்தில் அந்த மன்னன் முன்பிறவியில் புரிந்த சிறப்பைப் பெற்ற நல்ல தவத் தின் பயனால் அவனுடைய பட்டமகிஷியினுடைய அழகிய