பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு -241

மயக்கம். என்னும்-என்று கூறும். தன்மை-பிராயத்தின் இயல்பை. எய்துதற்கு-அடைவதற்கு அணியனாகி-சமீ பித்தவனாகி. வளர்-வளரும். இளம் பரிதி-பாலசூரியனை. போன்று-போல விளங்கி. வாழும்-வாழ்ந்து வரும். நாள்காலத்தில். ஒரு நாள்-ஒரு தினம். மைந்தன்-அந்த வ லி ைம ைய ப் .ெ ப ற் ற குமரன். மைந்து-வலிமை, இளம் பரிதி போன்றவன்: 'கூடம் சேர்த்தினார் இளங் கதிர்கொலோ இருந்த தென்னவே.' (சீவக சிந்தாமணி, 2420), செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி' (சிலப்பதி காரம், 11:2) என்பதற்கு அடியார்க்கு நல்லார், இளஞாயிற் றினது ஒளியினும் ஒளி சிறப்பு’ என்று எழுதிய உரையைக் காண்க. இளங்கதிர் ஞாயிறெள்ளும் தோற்றத்து வினங் கொளி மேனி (மணிமேகலை, பதிகம், 1-2) என வருவதை யும் காண்க.

பிறகு வரும் 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சந்திர வட்டக் குடையைப் பிடித்த மனுநீதிச் சோழ வேந்தனுடைய செல்வம் மேன்மேலும் ஓங்கி வளரும் அரண் மனையிலிருந்து மேகத்தை அளாவும் மாடங்கள் ஓங்கி நிற்கும் தெருவில் அரசர்களுடைய புதல்வர்களாகிய இன வரசர்கள் தன்னைச் சுற்றித் தங்களுடைய வாகனங்களில் ஏறிக்கொண்டு வர, தேன் நிரம்பிய மலர்களைக் கட்டிய மாலை தங்கியுள்ளவையும், குங்குமப்பூவின் குழம்பு பூசி விளங்குபவையுமாகிய தோள்களைப் பெற்றவனாகி, வீரம் பொங்கி எழுந்த சேனை வீரர்கள் தன்னைச் சுற்றிவரத் தேரின்மேல் தோற்றப் பொலிவை அடைந்து இளவரசன் சென்றான். பாடல் வருமாறு: -

"திங்கள்வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்று

மங்குல்தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக் கொங்கலர் மாலை த ழ்ந்த குங்குமம் குலவு தோளான் பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து

- - போக்தால்

பெ-16