பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பெரிய புராண விளக்கம்

திங்கள் வெண் கவிகை-வெண்மை நிறத்தைக் கொண்ட சந்திர வட்டக் குடையைப் பிடித்த மன்னன்-மனுநீதிச் சோழ வேந்தன். திரு-செல்வம். வளர்.மேலும் மேலும் வளரும். கோயில் நின்று-மனுநீதிச் சோழனுடைய அரண் மனையிலிருந்து. மங்குல்-மேகத்தை. தோய்-அளாவிய. மாட-மாடங்கள் உயர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். வீதி-தெருவில். மன்-வேறு மன்னர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். இளங்குமரர்-இளைய புதல்வர் களாகிய இளவரசர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சூழ-தங் கள் தங்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு தன்னைச் சுற்றி வர. க்: சந்தி. கொங்கு-தேன் நிரம்பிய. மலர்-மலர்களைக் கட்டிய ஒருமை பன்மை மயக்கம். மாலை-தார். தாழ்ந்ததங்கிய. குங்குமம்-குங்குமப்பூவின் குழம்பு ஆகுபெயர். தோளான்-பூசிய தோள்களைப்பெற்ற அந்த மன்னனுடைய. பொங்கிய-வீரம் பொங்கி எழுந்த தானை-சேனை வீரர்கள்: ஆகுபெயர். சூழ-தன்னைச் சுற்றிவர. த்: சந்தி. தேர் மிசை-தேரின்மேல். ப் : சந் தி. பொலிந்து-தோற்றப் பொலிவை அடைந்து போந்தான்-இளவரசன் சென்றான்.

அடுத்து வரும் 21-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அரசரைப் புகழ்கின்றவர்களாகிய மங்கலப் பாடல் களைப் பாடுகிறவர்களும், நின்று கொண்டே துதிப்பவர் களும், அமர்ந்து கொண்டு அரசருடைய புகழைப் பாடுபவர் களும் ஒரு பக்கம் இருந்தார்கள்; மற்றொரு பக்கத்தில் வாசனை கமழும் கூந்தல்களைப்பெற்ற பெண்மணிகள் இருந் தார்கள்; வேறு ஒரு பக்கத்தில் பெண்மணிகள் நழுவவிடும் வெள்ளை நிறத்தை உடைய சங்கு வளையல்கள் காட்சி அளிக்கும்; மிகுதியாக உள்ள முரசத்தோடு சங்க வாத்திய மும் ஆரவாரம் செய்வதனால் முழங்கும் ஒசையும் ஒரு பக்கத்தில் கேட்கும்; இவ்வாறு வெற்றியைப்பெற்ற இள வரசனாகிய இளைஞன் தேரில் ஏறிச் செல்லும் அலங்காரத் தைப் பெற்றவையும் மாணிக்கங்களைப் பதித்தவையும்