பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 243

ஆகிய மாடங்கள் உயர்ந்து நிற்கும் தெரு விளங்கும். பாடல் வருமாறு:

'பரசுவக் தியர்முன் சூதர் மாகதர் ஒருபால், பாங்கர்

விரைநறும் குழவார் சிந்தும் வெள்வனை ஒருபால், மிக்க முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால், வென்றி அரசிளங் குமரன் போதும் அணிமணி மாட வீதி.' பரசு-மனுநீதிச் சோழனைப் புகழும். வந்தியர். மங்கலப் பாடல்களைப் பாடுகிறவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். முன்-முன்னால், சூதர்-நின்றுகொண்டே துதிப்பவர்களும், ஒருமை பன்மை மயக்கம். மாகதர்-அமர்ந்து கொண்டே புகழைப் பாடுபவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். ஒரு பால்-ஒரு பக்கத்தில் இருந்தார்கள். பாங்கர்-மற்றொரு பக் கத்தில். விரை-வாசனை. நறும்-கமழும். குழலார்கூந்தலைப் பெற்ற பெண் ம ணி க ள். சிந்தும்-இளவரச னுடைய அழகைப் பார்த்து உடம்புகள் மெலிந்து தங்க ளுடைய கைகளிலிருந்து நழுவவிடும். வெள்வளை-சங்கு வளையல்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒருபால்-ஒரு பக்கத் தில் குவிந்து கிடக்கும். மிக்க-மிகுதியாக உள்ள. முரசொடுமுரசத்தைக் கொட்டும் ஒசையோடு; ஆகுபெயர். சங்கம்சங்கவாத்தியங்கள், ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்ப-ஊது பவர்கள் ஊதி ஒலியை எழுப்ப முழங்கு-முழங்கும். ஒலி ஒரு பால்-ஓசை ஒரு பக்கத்தில் கேட்கும். வென்றி-பகைவர் களோடு போரிட்டு வெற்றியைப் பெற்ற, அரசிளங்குமரன். இளவரசனாகிய இளைஞன். போதும்-தேரில் ஏறிச் செல்லும். அணி-அலங்காரம் செய்யப்பெற்ற. மணி. மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். மாடமாடங்கள் ஓங்கி நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். வீதி. திருவாரூரில் உள்ள தெரு இவ்வாறு விளங்கும்.

அடுத்து வரும் 22-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ஒப்பற்றதும் பெருமையைப் பெற்றதும்ாகிய தரும் தேவதை சிறிதளவும் தயைஇல்லாமல் சேனையைக்கொண்ட