பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு .' - 245

ஒரு பசு மாடாகவும், யமதருமன் அதன் கன்றுக்குட்டியாகவும் உருவங்களை எடுத்துக் கொண்டு வந்தார்கள் என்று ஒரு தனிப்பாடல் தெரிவிக்கிறது. அந்தப் பாடல் வருமாறு:

ஈசன் பசுவாகி ரமணிளங் கன்றாகி வீசுபுகழ் ஆரூர் வீதிவந்தார் அம்மானை: வீசுபுகழ் ஆரூர் வீதிவந்தா ராமாயின் காசளவு பாலும் கறவாதோ அம்மானை? கன்றை உதைகாலி கறக்குமோ அம்மானை?’’ அடுத்து வரும் 23-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்த அழகிய ஈன்றணிமையான பசுமாட்டினுடைய கன்றுக்குட்டி ஓர் அபாயமான இடத்தின் வழியே ஒடிச் சென்று சிவந்த தங்கத்தால் செய்யப்பட்டதும், அரசிளங் குமரன் ஏறிக் கொண்டு வந்ததும் ஆகிய தேரின் சக்கரத்தின் மேல் வேகத்தோடு ஒடிப்போகப்பட்டு இறந்து மேலே உள்ள சொர்க்கலோகத்தை அடைய, அதைப் பார்த்து அந்தத் தெருவில் இருந்து உருக்கத்தை அடைந்த தாய்ப்பசுமாடு சுழன்று ஒடிப்போய்த் தன்னுடைய மனத்தில் வெப்பத்தை அடையும்; அலறிக் கொண்டிருக்கும்; சோர்வை அடையும்: தன்னுடைய உடம்பில் நடுக்கத்தை அடைந்து தரையில் விழும். பாடல் வருமாறு: - - -

'அம்புனிற் றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்

செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால்

. - செல்லப் பட்டே உம்பரின் அடையக் கண்டங் குருகுதாய் அலமங் தோடி வெம்பிடும்; அலறும்; சோரும்; மெய்ந்நடுக் குற்று வீழும்.’’

அம்-அந்த அழகிய புனிற்றாவின்-ஈன்றணிமையானதும் பசுமாட்டினுடையதும் ஆகிய கன்று-கன்றுக்குட்டி. ஓர் அபாயத்தின் ஊடு-ஒர் அபாயமான இடத்தின் வழியே. போகி-ஓடிச் சென்று. ச் சந்தி. செம்-சிவந்த, பொனின்தங்கத்தாற் செய்யப் பெற்ற இடைக்குறை. தேர்-இளவர