பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - பெரிய புராண விளக்கம்

சன் ஏறிக் கொண்டு வந்த தேரினுடைய. க்:சந்தி. கால் மீது-சக்கரத்தின்கீழ் விசையினால்-வேகத்தோடு; உருபு மயக்கம். செல்லப்பட்டு-ஊழ்வசத்தால் செலுத்தப்பட்டு. ஏ: அசைநிலை. உம்பரின்-மேலே உள்ள சுவர்க்கலோகத்தை, அடைய-இறந்துபோய் எய்த. க்:சந்தி. கண்டு-அதைப் பார்த்து. அங்கு-அந்தத் தெருவில் உருகு-உருக்கத்தை அடைந்த, தாய்-தாய்ப்பசுமாடு. அலமந்து-சுழன்று. ஒடிஒடிச் சென்று. வெம்பிடும்-உள்ளக்கொதிப்பை அடையும். அலறும்-அலறிக் கொண்டிருக்கும். சோரும்-சோர்வை அடையும். மெய்-தன்னுடைய உடம்பில். ந்:சந்தி. நடுக்கு-நடுக்கத்தை உற்று-எய்தி. வீழும்-தரையில் விழும். கன்றை இழந்த பசுமாடு வருந்துவது உவமையாக வரும், எடுத்துக்காட்டு வருமாறு: கன்றுயிரி காராவின் துயரு டைய கொடி" (கம்பராமாயணம், குகப்படலம், 21) என வருதல் காண்க. .

பிறகு உள்ள 24-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அதைப் பார்த்து வலிமையைப் பெற்ற இளவரசன்', "இந்த இடத்தில் ஓர் அபாயமான செயல் வந்துவிட்டது?" என்று எண்ணித் தான் பேசும்வார்த்தைகள் தடுமாற்றத்தை அடைந்து தன்னுடைய உள்ளத்தில் துயரத்தால் வருந்தித் தன்னுடைய அறிவு கெட்டுப்போய், இந்தப் பசுமாடும் கன்றுக்குட்டியும் இன்றைக்கு என்னுடைய உணர்ச்சி என்னும் பெரிய குணம் அழியுமாறு கொன்றுவிட்டன; இதற்கு நான் என்ன பரிகாரம் செய்வேன்!” என்று எண்ணித் தான் ஏறிக்கொண்டிருந்த தேரிலிருந்து இறங்கி வந்து தரை யில் விழுந்தான். பாடல் வருமாறு:

'மற்றது கண்டு மைந்தன், வந்ததிங் கபாயம். என்று

சொற்றடு மாறி நெஞ்சில் துயருழந் தறிவ ழிந்து, பெற்றமும் கன்றும் இன்றென் உணர்வெனும் பெருமை * . * . . . - . . LDT町哥

செற்ற; என் செய்கேன்? என்று தேரினின் றிழிந்து

- . வீழ்ந்தான்.