பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 247

மற்று: அசைநிலை. அது-கன்றுக்குட்டி இறந்ததையும், தாய்ப்பசுமாடு அலறுவதையும்; ஒருமை பன்மை மயக்கம். கண்டு-பார்த்து. மைந்தன்-வலிமையைப் பெற்ற இளவர சன். இங்கு-இந்தத் தெருவில். அபாயம்-ஒர் அபாயமான செயல். வந்தது-நடந்துவிட்டது. என்று-என எண்ணி. சொல்-தான் பேசும் வார்த்தைகள், ஒருமை பன்மை மயக்கம், தடுமாறி-தடுமாற்றத்தை அடைந்து. நெஞ்சில்-தன்னுடைய உள்ளத்தில். துயர்-துயரத்தால். உழந்து-வருத்தத்தை அடைந்து. அறிவு-தன்னுடைய அறிவு. அழிந்து-கெட்டு. பெற்றமும்-இந்தப் பசும்ாடும். கன்றும்-கன்றுக் குட்டியும். இன்று-இன்றைக்கு. என்-என்னுடைய உணர்வு-உணர்ச்சி. எனும்-என்று பாராட்டப்படும்; இடைக்குறை. பெருமை. பெருந்தகைமை. மாள-கெட்டுப்போகுமாறு. ச்:சந்தி. செற்ற-அழித்துவிட்டன. என்-இனிமேல் நான் என்ன? செய்கேன்-செய்வேன். என்று.என எண்ணி. தேரினின்று. தான் ஏறிக்கொண்டு வந்த தேரிலிருந்து. இழிந்து-இறங்கி வந்து. வீழ்ந்தான்-தரையில் விழுந்தான். -

பிறகு உள்ள 25-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அலறுகின்ற பெருமையைப் பெற்ற பசுமாட்டைப் பார்த்து அந்த இளவரசன் தன்னுடைய அருமையாக உள்ள உயிர் பதைபதைக்கச் சோர்வை அடைவான்; தரையின் மேல் இறந்து கிடந்த கன்றுக்குட்டியைப் பார்த்து நீண்ட நேரம் பெருமூச்சுவிட்டுக் கொண்டு வருந்தி நின்று கொண்டி ருப்பான்; அகன்ற இடத்தை உடைய இந்தப் பூ மண்ட லத்தை ஆட்சி புரிந்து பாதுகாக்கும் மனுநீதிச் சோழன் என் னும் அடியேனுடைய தந்தையாகிய மன்னனுக்கு உலகத்தில் இந்தக் கொலைப்பழி வந்து அடையுமாறு நான் ஒருவன் பிறந்தவாறு என்ன பாவம்!’ என்று கூறுவான். பாடல் வருமாறு: -