பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பெரிய புராண விளக்கம்

'அலறுபே ராவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்: -- கிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி நிற்கும், "மலர்தலை உலகம் காக்கும் மனுவெனும் என்கோ மானுக் குலகில்இப் பழிவந் தெய்தப் பிறந்தவா ஒருவன்?

என்பான்.”

அலறு-தன் கன்றுக் குட்டியை இழந்து அலறும். பேர்பெருமையைப் பெற்ற, ஆவை-பசுமாட்டை, நோக்கி

பார்த்து. ஆருயிர்-தன்னுடைய அருமையான உயிர். பதைத்து-பதைபதைப்பை அடைந்து, ச்:சந்தி. சோரும்சோர்வை அடைவான். நிலமிசை-தரையின்மேல். க்:சந்தி. தன்றை-இறந்து கிடந்த கன்றுக்குட்டியை, நோக்கி-பார்த்து. நெடிது-நெடுநேரம். உயிர்த்து-பெருமூச்சை வி ட் டு க் கொண்டு. இரங்கி-கழிவிரக்கத்தை அடைந்து. நிற்கும்நின்றுகொண்டே இருப்பான். மலர்-அகன்ற தலை-இடத் தைக் கொண்ட உலகம்-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் உயிர்களை இட ஆகுபெயர். காக்கும்-ஆட்சி புரிந்து பாது காக்கும். மனு-மனுநீதிச் சோழன். எனும்-என்று பாராட் டப் பெறும்; இட்ைக்குறை. என்-அடியேனுடைய. கோமா னுக்கு-தந்தையாகிய மன்னனுக்கு. உலகில்-இந்தப் பூமியில். இப்பழி-இந்தக் கொலையினால் உண்டாகிய பழி. வந்து எய்த-வந்து அடையுமாறு. ப்: சந்தி. ஒருவன்-நான் ஒரு புதல்வன். பிறந்தவா-பிறந்தவாறு என்ன பாவம்! என் பான்-என்று கூறுவான். - -

அடுத்து உள்ள 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

எனக்கு உண்டான இந்தப் பழியை மாற்றுவதற்கு உரியதாகும் விதத்தை இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களாகிய சாத்திரங்களின் உண்மையை அறிந்த வேதியர்கள் இதற்குப் பரிகாரமாக விதித்த வழியின்படியாகச் செய்வது தருமம் ஆக இருக்குமானால், என்னுடைய தந்தையாகிய மனுநீதிச் சோழன் இதனைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே அந்தப்