பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 249. பரிகாரத்தைச் செய்வேன்' என்று எண்ணிய வலிமையைப் பெற்ற இளவரசன் தன்னுடைய உள்ளத்தில் உண்டான கொடிய துயரத்தைத் திர்த்துக்கொள்ளும் பொருட்டு அழகிய வேதியர்களுக்கு முன்னால் போனான். பாடல் வருமாறு: வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறைநூல்

6山开山岛t鲇 அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவ தறமே ஆகில் எந்தைஈ தறியா முன்னம இயற்றுவன் என்று மைந்த : சிந்தைவெக் துயரம் தீாப்பான் திருமறை யவது முன்

- - சென்றான் வந்த-எனக்கு உண்டாகி வந்த இப்பழியை-இந்தக் கோஹத்தியாகிய பழியை. மாற்றும்-போக்கிக் கொள்ளும். வகையினை-விதத்தை, மறை-இருக்கு வேதம், யஜுர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கு ளாகிய, ஒருமை பன்மை மயக்கம். நூல்-சாத்திரங்கள் எடுத்துக் கூறும்; ஒருமை பன்மை மயக்கம். வாய்மைஉண்மையை அறிந்திருக்கும். அந்தணர்-வேதியர்கள் ; ஒருமை பன்மை மயக்கம், விதித்த-இந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக விதித்த ஆற்றால்-வழியில்; உருபு மயக்கம். ஆற்றுவது -அந்தப் பரிகாரத்தை நான் செய்வது. அறமேதருமமே. ஆகில்-ஆக இருக்குமானால். எந்தை-என்னுடைய - தந்தையாகிய மனுநீதிச் சோழ மன்னன். ஈது.இதனை. அறியா முன்னம்-தெரிந்து கொள்ளாததற்கு முன்பே. இயற்றுவன்-அந்தப் ப ரி க | ர த் ைத ச் செ ய் ேவ T. என்று-என எண்ணி. மைந்தன்-வலிமையைப் பெற்ற இள வரசன். சிந்தை தன்னுடைய உள்ளத்தில் உள்ள வெம்கொடுமையாகிய துயரம் துயரத்தை தீர்ப்பான்-போக் . கிக் கொள்ளும் பொருட்டு. திரு-அழகிய மறையவர்-திரு வாரூரில் வாழும் வேதியர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். முன்-முன்னால், சென்றான்-போனான்.

அடுத்து வரும் 27-ஆம் பாடலின் கருத்து வருமாறு: