பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பெரிய புராண 967555

'தன்னுடைய உயிரைப் போன்ற கன்றுக்குட்டி இறந்துபோக அதனால் தளர்ச்சியை அடைந்த தாய்ப் பசுமாடு துயரத் தைச் சகிக்க முடியாததாகி முகத்துக்கு முன்னால் தீயைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு விம்மி விம்மித் தன்னு டைய முகத்தில் உள்ள கண்களிலிருந்து துயர நீர் சொரிய இந்த உலகத்தில் நிலைபெற்று வாழும் பல வகையான உயிர் களை ஆட்சி புரிந்து பாதுகாக்கும் செங்கோலை ஏந்திய மனு நீதிச் சோழ மன்னனுடைய தோற்றப் பொலிவைப் பெற்ற அரண்மனையின் வாசலில் கட்டித் தொங்கவிட்ட தங்கத் தால் செய்த அழகிய ஆராய்ச்சி மணியைப் போய்த் தன்னு டைய கொம்புகளால் அடித்தது. பாடல் வருமாறு:

'தன்னுயிர்க் கன்று வியத் தளர்ந்த ஆத் தரியா தாகி

முன்நெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற் கண்ணிர் வார

மன்னுயிர் காக்கும் செங்கோல் மனுவின் பாற் கோயில்

- வாயில் பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற் புடைத்த

. . தன்றே.'

தன்-தன்னுடைய, உயிர்க் கன்று-உயிரைப் போன்ற கன் துக்குட்டி. வீய-இறந்து போக. த்:சந்தி. தளர்ந்த-அதனால் தளர்ச்சியை அடைந்த ஆ-தாய்ப் பசுமாடு. த்:சந்தி. தரி யாதாகி-துயரத்தைச் சகிக்க முடியாததாகி. முன்-தன் முகத்துக்கு முன்னால் நெருப்பு-தியைப்போல. உயிர்த்துபெருமூச்சு விட்டுக்கொண்டு. விம்மி-விம்மி விம்மி அழுது. முகத்தினில்-தன்னுடைய முகத்தில் உள்ள கண்-கண்களி லிருந்து ஒருமை பன்மை மயக்கம். நீர்-துயரத்தைப் புலப் படுத்தும் நீர். வார-சொரிய. மன்-இந்த உலகத்தில் நிலை பெற்ற உயிர்-பல வகையான உயிர்களை ஒருமை பன்மை மயக்கம். காக்கும்-ஆட்சி புரிந்து பாதுகாக்கும். செங்கோல்: செங்கோலை ஏந்திய மனுவின்-மனுநீதிச் சோழமன்ன ஆணுடைய. பொன்-தோற்றப் பொலிவை உடைய தங்கத் தைப் பதித்த எனலும் ஆம், கோயில்-அரண்மனையி