பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 251 னுடைய வாயில்-வாசலில் கட்டித் தொங்கவிடப்பட்ட. பொன்-தங்கத்தால் செய்யப் பெற்ற. அணி-அழகைஉடைய. மணியை-ஆராய்ச்சி மணியை. ச்சந்தி. சென்று-அந்த அரண்மனையின் வாசலுக்குப் போய். கோட்டினால்-தன் னுடைய இரண்டு கொம்புகளினாலும்; ஒருமை பன்மை மயக்கம். புடைத்தது-அடித்தது. அன்று, ஏ. இரண்டும் ஈற்றசை நிலைகள்.

அரசர்களுடைய அரண்மனைகளின் வாசல்களில் ஆராய்ச்சி மணிகளைக் கட்டித் தொங்கவிட்டிருத்தல் மரபு. அது பின் வருவனவற்றாலும் விளங்கும். ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெல்லாம், நீடும் குடையில் தரித்த பிரான்... குலோத்துங்க சோழன்.” (குலோத்துங்கசோழன் உலா, இறுதிப்பாடல், 2), கடைமணியின் குரல் காண் பென். (சிலப்பதிகாரம், 20:3) என வருவனவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பழியை எடுத்துக்கூறி அடிக்கும் பறையின் முழக்கமோ? பேரொலியை எழுப்பும் பாலத்தின் சத்தமோ? மனுநீதிச் சோழ மன்னனுக்குப் பிறகு அரசாட்சியைப் பெறுவதற்கு உரியவனும் வலிமையைப் பெற்றவனும் ஆகிய இளவரச னுடைய உயிரைக் கொண்டு போக வரும் யமனுடைய வாகனமாகிய எருமை மாட்டினுடைய கழுத்தில் அணிந்த மணியினுடைய முழக்கமோ?’ என்று எண்ணி மனுநீதிச் சோழமன்னன் தன்னுடைய அரண்மனை வாசலுக்கு முன் னால் தொங்கிய ஆராய்ச்சி மணியினது ஓசையைக் கேட்டு, முழங்கி எழுந்த அந்த மணியின் ஒலி அந்தச் சோழமன்ன னுடைய காதுகளாகிய இந்திரியங்களில் நுழைந்த சமயத் தில். பாடல் வருமாறு: * -