பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 - பெரிய புராண விளக்கம்

பழிப்பறை முழக்கோ, ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ,

வேந்தன் - دی ' வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறவி ஊர் கிக் கழற்தணி மணியின் ஆர்ப்போ, என்னத்தன் கடைமுன்

- . கேள. த் தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்கபோது.' இந்தப் பாடல் குளகம். பழி-பழியை எடுத்துக்கூறி அடிக் கும். பறை-பறையினுடைய முழக்கோ-முழக்கமோ. ஆர்க் கும்-ஆரவாரம் செய்யும், பாவத்தின்-பாவங்களினுடையச் ஒருமை பன்மை மயக்கம். ஒலியோ-சத்தமோ. வேந்தன்மனுநீதிச் சோழமன்னனுக்கு வழி-பின்னால் ஆட்சி புரிவ தற்கு உரிய த்:சந்தி. திரு-அழகிய மைந்தன்-வலிமை யைப் பெற்ற இளவரசனுடைய. ஆவி-உயிரை, கொளகொண்டு போகும் பொருட்டு; இடைக்குன்ற, வரும் மறலிவரும் யமனுடைய ஊர்தி-வாகனமாகிய எருமை மாட்டி னுடைய. க்:சந்தி. கழுத்து-கழுத்தில். அணி-அணிந்த, மணியின்-வெண்கல மணியினுடைய. ஆர்ப்போ-பேரொ வியோ. என்ன-என்று. த்: சந்தி. தன்-தன்னுடைய. கடை" அரண்மனை வாசலுக்கு. முன்-முன்னால் கட்டித் தொங்க விட்டிருந்த ஆராய்ச்சி மணியினுடைய ஓசையை கேளாகேட்டு. த்: சந்தி. தெழித்து எழும்-முழங்கி எழுந்த, ஒசை-அந்த மணியின் ஒலி. மன்னன்-மனுநீதிச் சோழவேந்த னுடைய செவி-காதுகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புலம்-இந்திரியங்களுக்குள்; ஒருமை பன்மை மயக்கம். புக்க-நுழைந்த போது-சமயத்தில்.

யமனுடைய வாகனம் எருமை மாடு, கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன். , 'ஒரு மகிட . மிசையேறி அந்தகனும் எனை அடர்ந்து வருகையில்.’’ என்று திருப்புகழிலும் பட்டிக் கடாவில் வரும் அந்தகா., 'வெட்டும் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன்' என்று கந்தர் அலங்காரத்திலும், கார்மாமிசை காலன்வரின்’ என்று கந்தர் அநுபூதியிலும் வருவனவற்றைக் காண்க.