பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருதகரச் சிறப்பு 253

அடுத்து வரும் 29-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு அந்தப்iபசுமாடு தன்னுடைய கொம்புகளால் தன்னுடைய அரண்மனை வாசலில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அடித்த ஒலியைக் கேட்ட மனுநீதிச் சோழ மன்னன் சிங்காதன்த்திலிருந்து இறங்கி வந்து சென்று அழகிய துவசத்தைக் கட்டியிருக்கும் அரண் மனை வாசலை அடைய, அங்கே இருந்த வாயில் காவலர்கள் அந்த அரசனுக்கு எதிரில் அவனை வாழ்த்தி வணங்கிவிட்டு, இந்த இடத்தில் இதோ ஒரு பசுமாடு வந்து சேர்ந்து, அரச்னே, உன்னுடைய அரண்மனை வாசலில் கட்டித் தொங்கிய ஆராய்ச்சி மணியைத் தன்னுடைய இரண்டு கொம்புகளாலும் அசைத்து அடித்தது' என்று கூறினார் கள். பாடல் வருமாறு:

"ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து பூங்கொடி வாயில் கண்ணக் காவலர் எதிரே போற்றி, 'ஈங்கிதோர் பசுவங் தெய்தி இறைவரின் கொற்ற வாயில் துங்கிய மணியைக் கோட்டால் துளக்கிய தென்று

சொன்னார்.

ஆங்கு-அவ்வாறு. அது-அந்தப் பசுமாடு. தன்னுடைய கொம்புகளால் தன்னுண்டய அரண்மனை வாசலில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அடித்த ஒலியை. கேட்ட வேந்தன்-கேட்ட மனுநீதிச் சோழமன்னன், அரியணை-தன்னுடைய சிங்காதனத்திலிருந்து, இழிந்து-. இறங்கி வந்து. போந்து-சென்று. பூங்கொடி-பூத்தொழில் செய்யப் பெற்ற துவசத்தைக் கட்டியுள்ள. வாயில்-அரண் மனை வாசலை, நண்ண-அடைய. க்சந்தி. காவலர்-அந்த இடத்தில் இருந்த வாயில் காவலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எதிர்-அரசனுக்கு எதிரில் ஏ: அசைநிலை. போற்றி-அவனை வாழ்த்தி வணங்கிவிட்டு. ஈங்கு-இந்த அரண்மனை வாசலில். இது-இதோ, ஓர்-ஒரு. பசு-பசுமாடு. வந்து எய்தி-வந்து சேர்ந்து. இறைவ-அரசனே. நின்