பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 15

பெருமானுடைய கதை இகலோக வாழ்வுக்கும், பரலோக வாழ்வுக்கும் உறுதியை உண்டாக்கும் தன்மையைப் பெற்றது' என்று சோழ மன்னனிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். -

அவர் அவ்வாறு கூறியதைக் கேட்ட சோழவேந்தன், 'வீணான கதையாகவும் பயனற்ற கதையாகவும் இந்தச் சீவகசிந்தாமணி இருப்பதானால் மறுமைக்கும் இம்மைக்கும் உறுதியை உதவும் கதை என்ன இருக்கிறது? அந்தக் கதையைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற புலவர் யார் இருக்கிறார்? அந்தக் கதை சீவகசிந்தாமணியைப் போல இடைக்காலத்தில் பாடப்பெற்ற புதுக்கதையோ? அல்வது பழைய கதையோ? அதற்கு முதல் நூல் இருக்கிறதா? அந்த நூலைப்பாடம் சொன்னவர் யார் இருக்கிறார்? அதைக் கேட்டவர்கள் யார் யார்? அது தவம் செய்தவர் பாடிய வரலாறோ? தவத்தைச் செய்து அதைப் படித்துப் பேறு பெற்றவர்கள் கற்ற தனியான கதையோ?எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து எனக்குச் சொல்லுங்கள்' என்று கூறினான்.

அவ்வாறு சோழ மன்னன் மகிழ்ச்சிய்ோடு தம்மைக் கேட்கவே சேக்கிழார் பின்வருமாறு திருவாய்மலர்ந் தருளிச் செய்வாரானார்; இந்தப் பூமண்டலத்தில் திருத் தொண்டர்களுடைய பெருமைன்யச் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப்பெருமானார், தில்லைவாழந்தனர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற முதல் அடியை அசரீரி வாக்காக எடுத்து வழங்கினார். அதை முதலில் வைத்துத் திருநாவலூரில் திருஅவதாரம் செய்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தைப் பதினொரு பாசுரங்கள். அமைந்ததாகப் பாடியருளினார். அந்தத் திருத்தொண்டத் தொகையைத் தழுவித் திருநாரையூரில் கோயில் கொண்