பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரிய புராண விளக்கம்

டிருக்கும் பொல்லாப் பிள்ளையார்கருத்துக்களைத்தெரிவித் தருள அந்த ஊரில் வாழ்ந்து வந்த நம்பியாண்டார் நம்பி என்னும் சான்றோர் கட்டளைக் கலித்துறையில் அமைந்த திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடியருளினார்.

அந்த அந்தாதியைத் திருமுறைகண்ட இராசராசச் சோழச் சக்கரவர்த்தி, சிவாலயத்தேவர் முதலாக உள்ள வர்கள் படித்துப் பாராட்டினார்கள் என்று சேக்கிழார் கூறினார். -

'அவ்வாறான்ால் அந்தத் தூய்மையான வரலாற்றைத் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்' என்று சோழமன்னன் கூறினான். அதைக் கேட்டுச் சேக்கிழார் தில்லைவாழந்: தணர்கள் முதலாகத் திருநீலகண்ட யாழ்ப்பாண்ர் இறுதியாக உள்ள நாயன்மார்களைப் பற்றிப் பாடியுள்ள திருத்தொண்டத் தொகை திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் பொருளை விரிவாக எடுத்துக் கூறினார்.

அவர் கூறியவற்றைக் கேட்டுச் சோழமன்னன் அவருடைய திருவதனத்தைப் பார்த்துப் பின் வருமாறு கூறலானான்; தாங்கள் எடுத்துக் கூறிய திருத் தொண்டர் ஒவ்வொருவரும் பிறந்த நாடு, வாழ்ந்த ஊர், பிறந்த குலம், திருநாமம், செய்த திருத் தொண்டு, பரமுத்தியைப் பெற்றவர்கள், சீவன் முக்தர்களாக இந்த நாட்டில் வாழ்பவர்கள், இனிமேலும் பிறக்கப் போகிறவர் கள், அவர்களோடு சேர்ந்து இறைவனுடைய திருவருளைப்

பெற்றவர்கள், தங்களுடைய உறவினர்களைப் பகைவர் களாகக் கொண்டு திருவருளைப் பெற்றவர்கள் அவர் களுக்குப் பகைவர்களாக இருந்து நரகத்தை அடைந்தவர் கள், இல்லற வாழ்க்கையை நடத்தி முத்தியைப் பெற்றவர் கள், இல்லற வாழ்வில் பெறும் சிற்றின்பத்தை விவிக்கி, விட்டுத் துறவறத்தை ஏற்றுப் பிழைவராமல் வாழ்ந்து முத்தி பெற்றவர்கள், பிரமசாரிகளாகவே வாழ்ந்து சிவ