பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு 17

பெருமானுடைய திருவருளைப் பெற்று உஜ்ஜீவனத்தை அடைந்தவர்கள், நல்ல கதியைச் சற்குருவினுடைய திருவரு ளால் சேர்ந்து சிறப்படைந்தவர்கள், சிவ பூஜையைப் புரிந்து பாமுத்தியைப் பெற்றவர்கள், சிற்றறிவைப் பெறாதவர் களாகி அடியார்களுடைய சைவத் திருக்கோலமே உண்மை யான செல்வம் என்று எண்ணிச் சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்கள் என்று இவ்வண்ணமாகவே தொடர்ச்சி அமைய வகைவகையாகப் பிரித்துச் சொல்ல வேண்டும். அந்தத் தொண்டர்களுடைய வரலாறுகளை எல்லோரும் காது கொடுத்துக் கேட்கவும் பிறருக்குத் தம்முடைய திருவாய்களால் எடுத்துக் கூறவும் ஒப்பு இல்லாத கருத்துக்களைத் தெரிந்து கொண்டு விளக்கமாக விளங்கும் வண்ணம் உவமைகளைப் பெற்றதாக ஒரு வரலாற்றை யாவரும் கற்கவும் கற்றவண்ணம் ஒழுகவும் ஏற்ற வகையில் ஒரு பெருங்காப்பியமாக விரிவாகப் பாடி, வழங்குங்கள்' என்று சோழ மன்னன் கூறி அருள் மொழித் தேவருக்கு விடையை வழங்கி, வேண்டிய செல்வத்தையும் வழங்கினான். அந்தச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டு சேக்கிழார் சிதம்பரத்திற்கு எழுத் தருளிச் சென்றார்.

அவ்வாறு சிதம்பரத்தின் எல்லைக்கு வந்து ஆலயத் திற்குச் சென்று திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள நட ராஜப்பெருமானுடைய சந்நிதியில் தரையில் விழுந்து அந்தப் பெருமானை வணங்கிப் பிறகு தரையிலிருந்து எழுந்து பேய்த் தாமரைக் குளத்தில் நீராடி விட்டு அம்பலவாணர் சந்நிதிக்கு வேகமாக எழுந்தருளி அவரை வளங்கித் தம் முடைய கைகளைத் தம்முடைய தலயின்மேல் வைத்துக் .கும்பிட்டுத் திருவுள்ளத்தில் உருக்கத்தை அடைந்து நெகிழ்ந்து வரம்பு காண்பதற்கருமையான பேரானந்த சாக ாத்தில் முழுகினார். நடராஜப் பெருமானுடைய திருவடி களாகிய செந்தாமரை மலர்களை வணங்கி விட்டு நின்று கொண்டு,"எம்பெருமானே,தேவரீருடையதொண்டர்களின்

பெ. 2