பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளவ-சோழ மகாராஜனே.நின்-உன்னுடைய. புதல்வன். குமாரன். ஆங்கு-அந்தத் தெருவில். ஓர்-ஒரு.மணி-அடிக்கும் மணிகளைக் கட்டிய ஒருமை பன்மை மயக்கம். நெடும்-உயர மாக இருக்கும். தேர்மேல்-தேசின்மீது ஏறி-ஏறிக்கொண்டு. அளவு-கணக்கு. இல்-இல்லாத கடைக்குறை, தேர்-தேர் களும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தானை-படை வீரர்களும்; இட ஆகுபெயர். சூழ-தன்னைச் சுற்றிவர, அரசு-அரசர்கள்; திணைமயக்கம்; ஒருமை பன்மை மயக்கம், உலாம்-தேர்களின்மேல் ஏறிக்கொண்டு உலாவரும். தெரு வில்-வீதியில். போம்-போகும். கால்-சமயத்தில். இளைய.

ஒன்றும் அறியாத இளம்பருவத்தைக் கொண்ட, ஆன்கன்று. . பசுமாட்டினுடைய கன்றுக்குட்டி. தேர்-தேரினுடைய, கால் இடை-சக்கரங்களுக்கு நடுவில். கால்:ஒருமை பன்மை மயக்கம். புகுந்து-தானே நுழைந்து. இறந்தது-இறந்து விட்டது. ஆக-ஆகையினால், த்:சந்தி. தளர்வு-தளர்ச்சியை, உறும்-அடையும். இத்தாய்-இந்தத் தாய்ப் பசுமாடு. இத் தன்மை-இத்தகைய செயலை, விளைத்தது-செய்தது. என்றான்-என்று அந்த முதிய அமைச்சன் கூறினான்.

அந்த அமைச்சன் கூறியது இளவரசன்மேல் குற்றம் சிறி தும் இல்லை என்றும், கன்றுக்குட்டி தானே வந்து தேரினு டைய சக்கரங்களின் இடையே புகுந்து இறந்துவிட்டது என்றும் தோன்றும்படி இருக்கிறது. நின் புதல்வன்' என் றது, உண்க்கு ஒரே புதல்வன் இருக்கிறான். என்பதைச் சுட்டிக் காட்டியது, ‘தேரில் பல மணிகளைக் கட்டியிருந்த தனால் அவற்றின் ஒலியைக் கேட்டுக் கன்றுக்குட்டி வெளியில் ஒடியிருக்கலாம் என்ற கருத்தை, மணி’ என்ற சொல் குறிக் கிறது. தேர் உயரமாக இருந்ததனால் அது வரும்போது தூரத்திலிருந்தே அதனைப் பார்க்க முடியும்; ஆனால் கன்றுக்குட்டி அதையும் கவனிக்கவில்லை.” என்பதை, நெடுத் தேர்' என்பது குறிக்கிறது. இளவரசனோடு வேறு பல தேர்க்ளும் சேனை வீரர்களும் செல்லும்போது அவர்களைக்