பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு. 257

கடந்து தேருக்கு அடியில் புகுவது நடவாத காரியம். ஆனால் இந்தக் கன்றுக்குட்டி அந்தக் கூட்டத்தை எல்லாம் தாண்டி வந்து வேண்டுமென்றே தேரின் சக்கரத்துக்குள் சிக்கியிருக்க வேண்டும் என்பதை, அளவில் தேர்த் தானை சூழ் என்பது குறிப்பாற் புலப்படுத்துகின்றது. இளவரசன் அரசர்கள் உலா வரும் வீதியில்தான் தன் தேரை ஓட்டிச் சென்றான்: அந்த வீதியில் இந்தப் பசுமாட்டுக்கும் கன்றுக்குட்டிக்கும் என்ன வேலை?’ என்று நினைக்கும்படியாக, அரசுலாம் தெருவில் போங்கால்’ என்று அவன் கூறியது இருக்கிறது. அந்தக் கன்றுக்குட்டி இளங்கன்று பயம் அறியாது என்ப தற்கு ஏற்பத் தன்னுடைய பேதைமையால் தேர்ச்சக்கரங் களில் மாட்டிக் கொண்டுவிட்டது என்ற குறிப்பை அவன் சூறிய, இளைய ஆன்கன்று என்பது புலப்படுத்துகிறது. இவற்றால், உன்னுடைய புதல்வன்மேல் யாதொரு குற்ற மும் இல்லை’ என்பது படச் சமற்காரமாக அந்த முதிய மந்திரி கூறினான்.

பிறகு உள்ள 32-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அந்த முதிய அமைச்சன் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்ட மனுநீதிச் சோழ மன்னன் அந்தப் பசுமாடு அடைந்த துயரத்தைப் போலத் துயரத்தை அடைந்து கொடிய பாம் பின் நஞ்சு தன்னுடைய தலைக்கு ஏறினாற் போல வேதனை தன்னுடைய உள்ளத்தில் மிகுதியாக உண்டாகி, இந்த இடத்தில் இந்தப் பாதகச் செயல் நடந்தவாறு என்ன காரணம்?" என்று எண்ணித் துன்பத்தை அடைவாள்; கழிவிரக்கத்தை அடைவான்; ஏக்கத்தைப் பெறுவான்; என் னுடைய செங்கோல் மிக அழகாக இருக்கிறது!’ என்று சூறு வான்; மனச் சுழற்சியை அடைவான்; பிறகு தெளிவை அடைவான்; இவ்வாறு ஒரு வகையிலும் தெளிவுபடாமல் அந்த மன்னன் குழப்பத்தை அடைந்தான்.பாடல் வருமாறு:

பெ-17