பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பெரிய புராண விளக்கம்

அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி வெவ்விடம் தலைக்கொண் டாற்போல் வேதனை

. அசத்து மிக்கிங் கிவ்வினை விளைந்த வாறென்றிடருறும் இரங்கும் . ஏங்கும்

செவ்விதென் செங்கோல்!” என்னும், தெருமரும்,

. . தெளியும் தேறான்.” அவ்வுரை-அந்த முதிய அமைச்சன் கூறிய அந்த வார்த்தை களை ஒருமை பன்மை மயக்கம். கேட்ட வேந்தன்-கேட்ட மனுநீதிச்சோழ மன்னன். ஆ-அந்தப் பசுமாடு. உறு. அடைந்த துயரம்-துயரத்தைப் போன்ற துயரத்தை. எய்திஅடைந்து வெவ்விடம்-கொடிய பாம்பின் நஞ்சு. தலைக் கொண்டாற்போல்-தன்னுடைய தலைக்கு ஏறினாற்போல, வேதனை-துன்பத்தை அசத்து-தன்னுடைய உள்ளத்தில். மிக்கு-மிகுதியாக அடைந்து. இங்கு-இந்தத் திருவாருகில் இவ்வினை-இந்தப் பாதகச் செயல். விளைந்தவாறு-நடத்த வண்ணத்துக்கு. என்-என்ன காரணம். என்று-என்று எண்ணி. இடர்-துன்பத்தை. உறும்-அடைவான். இரங்கும்கழிவிரக்கத்தை ஆடைவான். ஏங்கும்-ஏக்கத்தைப் பெறு வான். என்-என்னுடைய. செங்கோல்-செங்கோல் ஆட்சி. 'செவ்விது-மிக அழகாக இருக்கிறது; அழகாக இல்லை என்பது குறிப்பு. என்னும்-என்று கூறுவான். தெருமரும். மனச்சுழற்சியை அடைவான். தெளியும்-பிறகு ஒருவாறு தெளிவை அடைவான். தேறான்.இவ்வாறு ஒரு வகையிலும் தெளிவுபடாமல் அந்த மன்னன் குழப்பத்தை அடைந்தான். - அடுத்து உள்ள 33-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

மனுநீதிச்சோழன், :உல்கத்தில் நிலைபெற்று வாழும் உயிர்க்ளை அரசாட்சி செய்து உலகம் பல மன்னர்களுக்கும் பொதுவானது என்பதைப் போக்கிவிட்டு எனக்கே உரிய தாகச் செய்து தருமங்களில் நெடுங்காலமாக ஈடுபட்டிருக்கும் என்னுடைய நீதி முறையின் வழி நன்றாக இருக்கிறது'