பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 259

என்று கூறுவான்; இந்தப் பாவம் என்ன பரிகாரத்தைப் புரிந்தால் போகும்?' என்று சொல்வான்; தன்னுடைய இளமைப் பருவத்தைப் பெற்ற கன்றுக்குட்டியைப் பாராமல் வருந்தி அலறும் தாய்ப் பசுமாட்டினுடைய முகத்தைப் பார்த்துச் சோர்வை அடைவான்; அந்த நிலையில் அந்தச் சோழமன்னன் அடைந்த துயரம் ஓர் அளவுக்குள் அடங்கு வது அன்று. பாடல் வருமாறு:

மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிங் தறத்தில் டுேம் என்னெறி நன்றால்!” என்னும், என்செய்தால் திரும்?"

- என்னும்: தன்னிளங் கன்று காணாத் தாய்முகம் கண்டு சோரும்; அங்கிலை அரசன் உற்ற துயரம்ஒர் அளவிற் றன்றால்.’ மன்-இந்தப் பூமண்டலத்தில் நிலைபெற்று வாழும். உயிர்பல வகையாகிய உயிர்களை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மக்கள், பல வகை விலங்குகள், பல வகையான பறவைகள், ஊர்வன, நீர்வாழ் பிராணிகள் முதலியவை. புரந்து-ஆட்சி புரிந்து பாதுகாத்து. வையம்-உலகம். பொது-பல மன்னர்களுக்கும் பொது என்பதை. க்:சந்தி. கடிந்து-மாற்றித் தனக்கே உரியதாகக் கொண்டு. பொதுக் கடிதல்: போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது." (புறநானூறு, 8:2), வழுகி, தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன். (r. 51:4-5), தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க் கும். (ஷ. 189:1-2), பொதுமொழி பிறர்க்கின்றி முழுதா ளும் செல்வர்க்கு, (கலித்தொகை, 68), அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறானாய். (நெடுநல்வாடை, அவதாரிகை), கொடியும் முரசும் கொற்றவெண் குடையும், பிறர்கொளப் பொறாஅன் தானே கொண்டு. (ச்தம்பரமும் மணிக்கோவை, 25), ஞாலம் பொதுஎனப் பொறா அரசர்." (திருக்குறள், 492, பரிமேலழகர் உரை), பூவலயம் பொது நீக்கி ஆண்டருளி. (பெரிய புராணம், கோச்செங்கட் சோழ