பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பெரிய புராண விளக்கம்

நாயனார் புராணம், 17), தனி கோலுகையாவது பூசக்கரம் பொதுக் கடிதல்.’’ (தக்கயாகப் பரணி, 2, உரை) என வருபவற்றைக் காண்க. அறத்தில்-முப்பத்து இரண்டு வகை யான தருமங்களில்; இவை இன்ன என்பதை முன்பே ஒரிடத் தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. நீடும்-நெடுங்கால மாகச் சிறப்பை அடைந்து விளங்கும். என்-என்னுடைய. நெறி-நீதி முறையின் வழி. நன்று-நன்றாக இருக்கிறது; ‘நன்றாக இல்லை' என்பது குறிப்பு. ஆல்:அசைநிலை. என்னும்-என்று தன்னையே நொந்து கொண்டு கூறுவான். என்-என்ன பரிகாரத்தை. செய்தால்-நான் புரிந்தால். தீரும்-இந்தக் கோஹத்தியால் உண்டான பாவம் போகும். என்னும்-என்று சொல்வான். தன்-தன்னுடைய. இளம்" இளம் பருவத்தைப் பெற்ற. கன்று-கன்றுக் குட்டியை.

காணா-பாராமல் அலறும். த்: சந்தி. தாய்-தாய்ப் பசு மாட்டினுடைய. முகம்-முகத்தை. கண்டு-பார்த்துப் பார்த்து. சோரும்-சோர்வை அடைவான். அந்நிலை

அத்தகைய நிலைமையில். அரசன்-மனுநீதிச் சோழன். உற்ற-அடைந்த துயரம்-வேதனை. ஒர் அளவிற்று-ஓர் அளவுக்குள் அடங்குவது. அன்று-அல்ல. ஆல்:ஈற்றசைநிலை:

பிறகு வரும் 33-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அமைச்சர்கள் மனுநீதிச் சோழமன்னன் வருந்திய அந்த வருத்தத்தைப் பார்த்து அந்தச் சோழ மன்னனுடைய திருவடிகளைப் பணிந்து, "தாங்கள் தங்களுடைய திருவுள் ளத்தில் தளர்ச்சியை அடைந்தருளுதல் இந்தப் பாவத்திற் குப் பரிகாரம் அல்ல; கொத்துக்கள் மலர்ந்திருக்கும் மாலையை அணிந்த தங்களுடைய வலிமையைப் பெற்றுள்ள புதல்வனை முன் காலத்தில் கோஹத்தியைக் செய்தவர் களுக்கு இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியுள்ள வேதியர்கள்