பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு -. 261

விதித்த முறையின் வழியில் நிற்கச் செய்வதே தருமம் என்று கூறினார்கள். பாடல் வருமாறு:

'மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடிவணங்கிச் சிந்தைதளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றால், கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதைசெய்

தார்க்குமறை அந்தணர்கள் விதித்தமுறை வழிகிறுத்தல் அறம், . ன்ன்றார்.”

மந்திரிகள்-அமைச்சர்கள். அது-மனுநீதிச் சோழ மன் னன் வருந்திய அந்த வருத்தத்தை. கண்டு-பார்த்து. மன்னவனை-அந்த மனுநீதிச் சோழ வேந்தனுடைய உருபு மயக்கம். அடி-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். வணங்கி-பணிந்துவிட்டு. ச்: சந்தி. சிந்தை-தங்களுடைய திருவுள்ளத்தில். தளர்ந்தருளுவது-தளர்ச்சியை அடைந் தருளுதல். மற்று: அசைநிலை. இதற்கு-இந்தக் கோஹத்தி யால் உண்டான பாவத்திற்கு. த்:சந்தி. தீர்வு-பரிகாரம். அன்று-அல்ல. ஆல்:அசைநிலை. கொந்து-கொத்துக் களாக உள்ள; ஒருமை பன்மை மயக்கம். அலர்-மலர் களைக் கட்டியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். தார்மாலையை அணிந்திருக்கும். மைந்தனை-வலிமையைப் பெற்ற தங்களுடைய புதல்வனை. முன்-முன் காலத்தில். கோவதை-கோஹத்தியை. செய்தார்க்கு-செ ய் த வர் களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக்கம். அந்தணர்கள்வேதியர்கள். விதித்த முறை வழி-விதித்த நீதி முறையின் வழியில். நிறுத்தல்-நிற்கச் செய்தல். அறம்-தருமம் ஆகும். என்றார்-என்று அந்த அமைச்சர்கள் கூ றினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். கோஹத்தியால் உண்டாகும் பாவத்துக் குப் பரிகாரம் உண்டு: "ஆன்முலை அறுத்த அறனி லோர்க்