பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பெரிய புராண விளக்கம்

விழுந்த செவ்வண்ண-சிவந்த நிறத்தைக்கொண்டக்:சந்தி. கமலம்-தாமரை மலரை. போல்-போல. முகம்-தன்னு டைய அழகிய முகம். புலர்ந்து-உலர்ந்து: வாட்டத்தை அடைந்து. செயிர்த்து-கோபம் மூண்டு. உரைப்பான்-கூறு வானானான்.

பின்பு உள்ள 40-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"மந்திரிகளே, அவ்வாறு நீங்கள் கூறிய வார்த்தைகளில் குறிப்பிட்டவையாகிய தொன்று தொட்டு வரும் நீதி முறை பின் வழிகளாகிய அவை இருக்கட்டும்; கருமத்தின் வழியி னுடைய செம்மையாகிய மெய்யின் இயல்பை நீங்கள் சிறிதளவேனும் சிந்தித்துப் பாராமல் பேசுகிறீர்கள்: எந்த உலகத்தில் எந்தப் பசுமாடு இத்தகையதாகும் துன்பத் தால் வெப்பமான பெரு மூச்சை விட்டுக்கொண்டு கதறி யழுது ஆராய்ச்சி மணியை அடித்து விட்டுத் தரையில் விழுந்தது? சொல்லுங்கள்; கேட்கிறேன்.” பாடல் வருமாறு:

அவ்வுரையில் வருநெறிகள் அவைகிற்க, அறநெறியின் செவ்வியஉண் மைத்திறம்நீர் சிங்தைசெயா துரைக்

3. கின்றீர்; எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாம்இடரால் வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்து விழுங் தது? -

- விளம்பீர்.”

அவ்வுரையில்-மந்திரிகளே, அவ்வாறு நீங்கள் கூறிய வார்த்தைகளில்: ஒருமை பன்மை மயக்கம். வரு-தொன்று தொட்டு வரும். நெறிகள்-நீதி முறையின் வழிகளாகிய, அவை நிற்க-அவை இருக்கட்டும். அற-தருமத்தின். நெறியின்-வழியினுடைய செவ்விய-செவ்வையாக உள்ள. உண்மை-மெய்யினுடைய த்:சந்தி. திறம்-வகைகளை; ஒருமை பன்மை மயக்கம். இயப்பை என்றும் ஆம். நீர்மந்திரிகளாகிய நீங்கள் யாவரும்; ஒருமை பன்மை மயக்கம்,