பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்கரச் சிறப்பு 267

அடுத்து வரும் 39-ஆம் செய்யுளின் உள்ளுறை

வருமாறு: -

'அவ்வாறு தன்னை வணங்கி விட்டுக் கூறிய மந்திரி களை அவர்களுடைய முகங்களைப் பார்த்து உண்மையின் இயல்பை ஆராய்ந்து தெரிந்து கொண்ட மனுநீதிச் சோழன் என்று பாராட்டப்படும் வெற்றியைப் பெற்ற மன்னன். ! இவ்வாறு நீங்கள் குற்றமான வார்த்தைகளைக் கூறினர் கள்' என்று நெருப்பின் நடுவில் விழுந்த சிவந்த நிறத்தைக் கொண்ட தாமரை மலரைப்போலத் தன்னுடைய முகம் உலர்ந்து போய்க் கோபம் அடைந்து கூறுவானானான்.' பாடல் வருமாறு: -

அவ்வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம்

- நோக்கி: மெய்வண்ணம் தெரிந்துணர்ந்த மனுவென்னும் விறல்

வேந்தன் 'இவ்வண்ணம் பழுதுரைத்தீர்' என்றெரியின் இடைத். தோய்ந்த, செவ்வண்ணக் கமலம்போல் முகம்புலர்ந்து செயிர்த்

துரைப்பான். '

அவ்வண்ணம்-அவ்வாறு. தொழுது-த ன் ைன

வணங்கிவிட்டு. உரைத்த-கூறிய. அமைச்சர்களை-மந்திரி களை. முகம்-அவர்களுடைய முகங்களை: ஒரும்ை பன்மை மயக்கம். நோக்கி-பார்த்து. மெய்-உண்மையினுடைய. வண்ணம்-இயல்பை தெரிந்து-ஆராய்ந்து. உணர்ந்த

தெரிந்து கொண்ட மனு-மனுநீதிச் சோழமன்னன். என்" னும்-என்று பாராட்டப்பெறும். விறல்-பகைவர்களைப் போரில் வெல்லும் வீரத்தைப் பெற்ற வேந்தன்-மன்னன்.

இவ்வண்ணம்-இவ்வாறு. பழுது-குற்றமான சமாதானங் களை ஒருமை பன்மை மயக்கம். உரைத்தீர்-நீங்கள்

சூறினீர்கள்; ஒருமை பன்மை மயக்கம். என்று-எண். எரியின்-நெருப்பின். இடை-நடுவில், த்:சந்தி, தோய்ந்த