பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பெரிய புராண விளக்கம்

உன்னுடைய புதல்வனை இறக்கும் வண்ணம் புரிதல் வழ்க்கம்அன்று; இருக்கு வேதம், யஜுர்வேதம், சாமவேதம் அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் விதித்துக் கூறிய தருமத்தைச் செய்தல் பழைய காலம் தொட்டு வரும் வழி அன்றோ? பழமையான சோழநாட்டை ஆட்சி புரிந்து பாதுகாக்கும் மனுநீதிச்சோழ மன்னனே என்று கூறினார்.’’ பாடல் வருமாறு:

என்றரசன் இகழ்ந்துரைப்ப எதிர்கின்ற மதிஅமைச்சர்

கின்றநெறி உலகின்கண் இதுபோல்முன் நிகழ்ந்தர்ால்,

பொன்றுவித்தல் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல்

தொன்றுதொடு நெறியன்றோ? தொல்கிலம்கா வலை,

- - - எனறான்.

என்று-என இவ்வாறு, அரசன்-மனுநீதிச் சோழ மன்னன். இகழ்ந்து-தன்னுடைய அமைச்சர்களை இகழ்ச்சி செய்து. உரைப்ப-பேச. எதிர்-அந்த மன்னனுடைய எதிரில் நின்ற-நின்று கொண்டிருந்த மதி-சிறந்த அறிவைப் பெற்ற..அமைச்சர்-மந்திரியார் ஒருவர். நின்ற-நிலைத்து நின்ற நெறி-நீதிமுறையின் வழி. உலகின்கண்-இந்தப் பூமியில். இதுபோல்-இதைப் போல. முன்-முன் காலத்தில். நிகழ்ந்தது-நடைபெற்றது உண்டு. ஆல்: அசைநிலை. பொன்றுவித்தல்-உன்னுடைய புதல்வனை இறக்குமாறு செய்தல். மரபு-வழக்கம், அன்று-அல்ல. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்று நான்கு வேதங்களும்; ஒருமை பன்மை மயக்கம். மொழிந்த்-விதித்துக் கூறிய. அறம்தருமத்தை. புரிதல்-செய்தல். தொன்றுதொடு-தொன்று தொட்டு வந்த நெறி-நீதி முறையின் வழி. அன்றோஅல்லவோ. தொல்-பழமையான. நிலம்-சோழநாட்டை. காவலை-ஆட்சி புரிந்து பாதுகாக்கும் மனுநீதிச் சோழ மன்னனே. என்றார்-என்று கூறினார்.