பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 265 தொன்மனுநூல் தொடைமனுவால் துடைப்புண்ட தெனும் வாாததை

மன்னுலகில் பெறமொழிந்தீர், மந்திரிகள், வழக்,

r கென்றான்.” இதுவும் மனுநீதிச் சோழ மன்னன் தன்னுடைய மந்திரி களைப் பார்த்துச் சொன்னது. என்-என்னுடைய. மகன்புதல்வன். செய்-புரிந்த பாதகத்துக்கு-கொலை பாதகச் செயலினால் உண்டான பாவத்தைப் போக்கிக் கொள் வதற்கு. இரும்-பெரிய. தவங்கள்-தவங்களை. செயபுரிவதற்கு இடைக்குறை. இசைந்து-நான் சம்மதித்து. ஏ; அசைநிலை. அன்னியன்-அயலான் ஒருவன். ஓர் உயிர்ஒர் உயிரை. கொன்றால்-கொலை செய்தால். அவனைஅந்த அயலானை. க்: சந்தி. கொல்வேன். ஆனால்-நான் கொலை செய்வேனானால். தொல்- பழமையான. மனு நூல்-மனு இயற்றிய சாத்திரமாகிய தொடை-சுலோகங் களால் அமைந்த மனுதர்ம சாத்திரம்; தொடை, ஒருமை பன்மை மயக்கம். மனுவால்-இந்த மனு நீதிச்சோழமன்ன னால். துடைப்புண்டது-அழிக்கப்பட்டது. எனும்-என்று கூறும்: இடைக்குறை. வார்த்தை-வார்த்தைகளை; ஒருமை பன்மை மயக்கம். மன்-நிலை பெற்று விளங்கும். உலகில்-இந்தப் பூமண்டலத்தில். பெற-நான் பெறுமாறு. மந்திரிகள்-அமைச்சர்களே, மொழிந்தீர்-நீங்கள் கூறினீர் கள், ஒருமை பன்மை மயக்கம். வழக்கு-பழைய வழக்கம் என்று சொன்னீர்கள். என்றான்-என்று மனுநீதிச் சோழன்

கூறினான்.

அடுத்து உள்ள 38-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: என்று இவ்வாறு மனுநீதிச்சோழ மன்னன் தன்னுடைய அமைச்சர்களை இகழ்ந்து பேச, அவனுடைய எதிரில் நின்று கொண்டிருந்த அறிவு பெற்ற ஒரு மந்திரியார், நிலைத்து நின்றதாகிய இந்த நீதி முறையின் வழி இந்த உலகத்தில் இதைப்போல முன் காலத்தில் நடை பெற்றிருக்கிறது: