பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பெரிய புராண விளக்கம்

அரசனாகிய தன்னாலும். தன்-தன்னுடைய பரிசனத்தால். பரிவார மக்களாலும்; ஒருமை பன்மை மயக்கம். ஊனம்குறைபாடுகள்; ஒருமை. பன்மை மயக்கம். மிகு-மிகுதியாக உள்ள. பகை-பகைவர்களினுடைய; திணைமயக்கம். த்:சந்தி, திறத்தால்-வகையினாலும். கள்வரால்-திருடர், களாலும்; ஒருமை பன்மை மயக்கம். உயிர்தம்மால்-மக்கள், பல வகைப் பறவைகள், ஊர்வன, புழுக்கள், பூச்சிகள், பல வகையான விலங்குகள், நீர்வாழ் பிராணிகள் முதலிய உயிர்களாலும். உயிர்: ஒருமை பன்மை மயக்கம். தம்; அசைநிலை. ஆன-உண்டான பயம்-அச்சங்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஐந்தும்-ஐந்தையும். தீர்த்து-போக்கி. அறம்-தருமத்தை. காப்பான்-பாதுகாப்பவன். அல்லனோ. அல்லவோ? திணைமயக்கம்.

அடுத்து உள்ள 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"என்னுடைய புதல்வன் புரிந்த பாதகத்துக்காகப் பெரிய தவங்களைப் புரியச் சம்மதித்து அயலான் ஓர் உயிரைக் கொலை செய்துவிட்டால் அதற்காக அந்த அயலானை நான் கொலை செய்வேனானால் பழைய மனு இயற்றிய மனுநீதி சாத்திரமாகிய சுலோகங்களைப் பெற்ற நூல் இந்த மனுநீதிச் சோழ மன்னனால் அழிக்கப்பட்டது என்னும் வார்த்தைகள் நிலை பெற்று விளங்கும் இந்தப் பூ மண்டலத்தில் தான் அடையும் வண்ணம் கூறினீர்கள்; வழக்கம் என்று அமைச்சர்களே, சொன்னீர்கள்' என்று மனுநீதிச்சோழன் தன்னுடைய மந்திரிகளைப் பார்த்துக் கூறினான்.” . . . . . . . .

பாடல் வருமாறு:

- என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செய -

. . . . இசைந்தே அன்னியன்ஒர் உயிர்கொன்றால் அவனைக்கொல்

g வேனானால்