பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 263

நோய்-உருத்தமாகிய வியாதிக்கு. மருந்து-பரிகாரமாகிய மருந்து. ஆமோ-ஆகுமோ? மைந்தனை-வலிமையைப் பெற்ற என்னுடைய புதல்வனாகிய இளவரசனை இழங் கின்றேன்-இழந்துவிடுகிறேன். என்று-என எண்ணி,எவ்விரும் நீங்கள் எல்லோரும். சொல்லிய-கூறிய இச்சழக்கு இந்த வஞ்சகமான சமாதானத்துக்கு. நான்-யான் இசைத் தால்-சம்மதித்தால். தருமம்-தருமதேவதை. தான்; அசை நிலை. சலியாதோசலிப்பை அடையாதோ?

அடுத்து வரும் 36-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: பெரிய நாட்டை அரசாட்சி புரிந்து பாதுகாக்கும் அரசனாகிறவன் நிலை பெற்ற உயிர்களைப் பாதுகாக்கும் காலத்தில், அந்த உயிர்களுக்குத் துன்பம் தன்னாலும் தன் பரிவார மக்களாலும், குறைவு மிகுதியாக உள்ள பகைவர்களின் திறத்தாலும், கள்வர்களாலும், பல வகை உயிர்களாலும் உண்டான அச்சங்கள் ஐந்தையும் போக்கித் தருமத்தைப் பாதுகாப்பவன் அல்லனோ?’ பாடல் வரு மாறு: - - " .

' மாநிலம்கா வலன் ஆவான் மன்னுயிர்காக் கும்காலைத்

தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்தும்தீர்த் தறங்காப்பான் அல்லனோ? இது மனு நீதிச்சோழன் தன்னுடைய அமைச்சர்களைப் பார்த்துக் கூறியது. மா-பெரிய நிலம்-நாட்டை. காவலன்ஆட்சி செய்து பாதுகாக்கும் வன்மையைப் பெற்ற மன்னன்: மன்-நிலைபெற்ற உயிர்-மக்கள், பலவகை விலங்குகள், பலவகைப் பறவைகள், ஊர்வன, நீர் வாழ் பிராணிகள் முதலிய உயிர்களை ஒருமை பன்மை மயக்கம். காக்கும்பாதுகாக்கும். காலை-காலத்தில் தான் என்றது அர்சனை. அ தனுக்கு-அந்த உயிர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். இடையூறு-துன்பங்கள்: ஒருமை பன்மைம்யக்கம். தன்னால்