பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280. பெரிய புராண விளக்கம்

வருத்தத்தை அடையும். இது-இந்த நிலை. தனது-பசுமாட் டினுடைய உறு-அடைந்த பேரிடர்-பெரிய துன்பத்தை. யானும்-நானும். தாங்குவதே-ஏற்றுக்கொண்டு அடைவதே. கருமம்-என் கடமை. என-என்று கூறி, இடைக்குறை. அனகன்-பாவம் இல்லாதவனாகிய அந்தச் சோழமன்னன். அரும்-யாராலும் செய்வதற்கு அருமையாக உள்ள. பொருள்-ஒரு காரியத்தை. துணிந்தான்-செய்யத் துணிந்து விட்டான். அமைச்சரும்-அந்த மன்னனுடைய மந்திரிகளும்; ஒருமை பன்மை மயக்கம். “உம்மை அங்கே இருந்த மற்றவர் களையும் குறித்து நின்றது. அஞ்சினர்-பயத்தை அடைந்த வர்களாகி, ஒருமை பன்மை மயங்கம்; முற்றெச்சம். அகன்றார்-அரண்மனையிலிருந்து போய் விட்டார்கள் ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 43-ஆம் பாடலின் கருத்து வருமாறு : 'மனுநீதிச் சோழமன்னன் தன்னுடைய புதல்வனைத் தான் இருக்கும் அந்த இடத்திற்கு அழைத்துக்கொண்டு வரச்செய்து தன்னுடைய அமைச்சன் ஒருவனைப் பார்த்து, ! நீ முன்னால் இந்த இளவரசனைப் பசுமாடு தன்னுடைய கன்றுக்குட்டியை இழந்த அந்தத் தெருவுக்கு அழைத்துக் கொண்டு போய் வலிமையைப் பெற்ற தேரினுடைய சக்கரங்களை அவன்மேல் ஏறும் வண்ணம் செய்வாயாக’’ என்று கூற, அந்த அமைச்சனும் அந்தக் காரியத்தைச் செய்ய மனம் இல்லாதவனாகிப் புறப்பட்டுச் சென்று தன்னுடைய அருமையான உயிர்ை விட்டுவிட, அதனை அறிந்த அந்தச் சோழ மன்னன் தன்னுடைய குடும்பத்தில் பிறந்த புதல்வனைத் தானே தேரில் அழைத்துக் கொண்டு அந்த விதியை அடைந்தான். பாடல் வருமாறு:

மன்னவன்றன் மைந்தனைஅங்

-: * கழைத்தொருமங் திரிதன்னை முன்னிவனை அவ்விதி

முரண்தேர்க்கால் ஊர்க’ என