பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 279.

அடுத்து உள்ள 42-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மனுநீதிச் சோழமன்னன் என்று இவ்வாறு கூறிவிட்டு, 'இந்தக் கோஹத்தியினால் வந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கு இனிமேல் பரிகாரமாகச் செய்வதற்குரிய செயல் இந்தப் பசுமாடு தன்னுடைய உள்ளத்தில் வருந்தும் துயரத்தைப் போக்க முடியாத நான் வருத்தத்தை அடையும் இந்த நிலை இந்தப் பசுமாடு அடையும் பெரிய துன்பத்தை நானும் ஏற்றுக் கொண்டு அடைவதே என்னுடைய கடம்ை' என்று கூறிப் பாவம் இல்லாதவனாகிய அந்தச்சோழமன்னன் யாராலும் செய்வதற்கு அருமையான ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்துவிட்டான்; அதை அறிந்த அவனுடைய மந்திரிகளும் பயத்தை அடைந்தவர்களாகி அரண்மனையை விட்டு விட்டுப் போனார்கள். பாடல் வருமாறு : -

'எண்மொழிந்து, மற்றிதனுக்

கினியிதுவே செயல்இஷ்வான்

மனம் அழியும் துயர் அகற்ற

மாட்டாதேன் வருந்தும்இது

தனதுறுபே ரிடர்யானும்

தாங்குவதே கருமம் என

அனகன் அரும் பொருள்துணிந்தான்;

அமைச்சரும்அஞ் சினர்.அகன்றார்.'

என-மனுநீதிச்சோழன் என்று இவ்வாறு இடைக்குறை. மொழிந்து-கூறிவிட்டு மற்று அசைநிலை. இதனுக்குஇந்தக் கோஹத்தியினால் வந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கு. இனி-இனிமேல். இதுவே-இதுதான். செயல்-பரிகாரமாகச் செய்வதற்குரிய காரியம். இவ்வான்தன்னுடைய கன்றுக்குட்டியை இழந்து நிற்கும் இந்தப் பசுமாடு. மனம்-தன்னுடைய உள்ளத்தில் அழியும்வருத்தத்தை அடையச்செய்யும். துயர்-துயரத்தை அகற்றபோக்க . மாட்டாதேன்-முடிய்ாத நான் வருந்தும்