பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பெரிய புராண விளக்கம்

வணங்க நின்றானை.', 'எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த.' :விண்பணிந்தேத்தும் வேதியா.’’, ‘சம்புவே உம்பரார் தொழுதேத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா.’’, இமை யோர் தொழுதேத்தும் விகிர்தனே.”, இமையோர் தொழு கோவே. விண்ணவர் ஏத்தும் எந்தை.', "திருமால் பிரமன் கூடித் தேவர் வணங்கும் அமரன்.", 'திருவனார் பணிந்தேத்தும் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவனார்.', 'நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள். , 'தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்.', 'விண்ணவரும் மண்ணவரும் தொழநற் சோதிய

துருவாகி.', 'விண்ணவரொடு மண்ணவர் தொழ அண்ணல் ஆகி நின்றார்.', 'உம்பரார் தொழுதேத்த.', :மால் அயன்ஏத்த அந்தண் விழி கொண்டீர். , தேவர்

தொழநின்ற.சுந்தரச் சோதியாய்.” என்று சுந்தரமூர்த்தி நாயன்ாரும், 'விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய்.”, வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்.', 'பரவுவார் இமையோர்கள்.', 'வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும்.' நின்வெறி மலர்த்தாள் தொழுது செல் வானத் தொழும்பர்.', விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்.' ', 'அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர், , புரந்த ராதியர் அயன் மால் போற்றிசெயும் பித்தன்.", பாரோர் விண்ணோர் பரவி,ஏத்தும் பரனே', 'அல்லிக் கமலத் தானும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் சொல்லிப் பிரவும் நாமத் தரனை.', 'பாடிமால் புகழும் பாதமே.', ' 'மறையவரும் வான வரும், வணங்கிடநான் கண்டேனே. ', 'மாயவன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்,, 'வந்திமையோர்கள் வணங்கி ஏத்த மாக் கருணைக் கடல்ாய். , தேவர்தொழும். பதம்வைத்த ஈசன்: என்று மாணிக்க வாசகரும் பாடியருளிய வற்றைக் காண்க.