பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பெரிய புராண விளக்கம்

மார்பின்மேல் தான் ஏறிக் கொண்டு வந்த தேரினுடைய சக்கரங்கள் பதியுமாறு அந்தத் தேரை ஓட்டினான்; மனு நீதிச் சோழ மன்னனுடைய அருமருந்தன்ன அரசாட்சி அருமையானதோ? அன்றி எளியதுதானோ?’ பாடல் வருமாறு:

'ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளான்என் பதும்

- ១...៩ឍ தரும ம்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைங்தன் மருமம்தன் தேராழி உறஊர்ந்தான்; மனுவேங்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதன்?"

தன்-தன்னுடைய. குலத்துக்கு-குடும்பத்துக்கு: பரம் பரைக்கு, எனலும் ஆம். ஒரு மைந்தன்-ஒரு புதல்வனே. உள்ளான்-இருக்கிறான். என்பதும்-என்பதையும். உண ரான்-மனுநீதிச் சோழன் எண்ணிப் பார்க்கவில்லை. தருமம்அறம். தன்-தன்னுடைய. வழி-வழியில், ச்: சந்தி. செல்கைநடக்குமாறு செய்வதே. கடன்-தன்னுடைய கடமை. என்று-என்று எண்ணி, தன்-தன்னுடைய. மைத்தன்-புதல் வனுடைய. மருமம்-மார்பின்மேல். தன்-தான் ஏறிக் கொண்டு வத்த தன்னுடைய தேர்-தேரினுடைய ஆழிசக்கரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உற-பதியும் வண் :ணம், ஊர்ந்தான்-அந்தத் தேரை ஓட்டினான். மனுவேத் தன்-மனுநீதிச் சோழனுடைய. அருமந்த-அருமருந்தன்ன. மரூஉமொழி, மருந்து-அமிர்தம். அரசாட்சி-அரசை ஆளும் முறை. அரிதோ-அருமையாக உள்ளதோ? மற்று-அன்றி, எளிதோதான்-எளிமையானது தானோ? மிக மிக் அரியது என்பது க்ருத்து. -

அடுத்து வரும் 45-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

குளிர்ச்சியைப் பெற்ற அருளை உடையவனும், வெள்ளை நிறத்தைக் கொண்ட சந்திரவட்டக் குடையைப் பிடித்தவனும்ாகிய மனுநீதிச் சோழமன்னன் புரிந்த அருமை யான செயலைப் பார்த்துச் சகிக்காமல் இந்தப் பூமண்டலத்