பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு - 283 தில் வாழும் மக்கள் தங்களுடைய கண்களிலிருந்து மழை யைப் போல நீரைச் சொரிந்தார்கள்; தேவலோகத்தில் வாழும் தேவர்கள் மனுநீதிச் சோழமன்னன் செய்த செய லின் அருமைப்பாட்டை எண்ணி மலர்மாரியைப் பொழிந் தார்கள்; தலைவனாகிய அந்தச் சோழ மன்னனுடைய கண்களுக்கு எதிரில் அலங்காரம் செய்யப் பெற்ற அந்தத் தெருவில் இளமையை உடைய இடப வாகனத்தின்மேல் தேவர்கள் வணங்குமாறு விதிவிடங்கப் பெருமான் எழுந் தருளி வந்து நின்றான். பாடல் வருமாறு: -

'தண்ணளிவெண் குடைவேந்தன்

செயல்கண்டு தரிய து மண்ணவர்கண் மழைபொழிந்தார்; வானவர்பூ மழைசொரிந்தார்; அண்ணலவன் கண்ணெதிரே

அணிவிதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழகின்றான் வீதிவிடங் கப்பெருமான்.' தண்-குளிர்ச்சியைப் பெற்ற அளி-அருளை உடையவ னும்; திணைமயக்கம். வெண்-வெள்ளை நிறத்தைக் கொண்ட குடை-சந்திர வட்டக் குடையைப் பிடித்தவனும் ஆகிய; திணைமயக்கம். வேந்தன்-மனுநீதிச் சோழமன்னன். செயல்-செய்த அரிய செயவை. கண்டு-பார்த்து. தரியாதுசகிக்காமல். மண்ணவர்-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக் கள்; ஒருமை பன்மை மயக்கம். கண்-தங்களுடைய கண்களி லிருந்து: ஒருமை பன்மை மயக்கம். மழை-மழையைப் போல. பொழிந்தார்- நீரைச் சொரிந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வானவர்.தேவலோகத்தில் வாழும் தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பூமழை-மலர் மாரியை. சொரிந்தார்-பொழிந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அண்ண்ல்-தலைவனாகிய, பெருமையை உடை யவன்' எனலும் ஆம். அவன்-அந்த்ச் சோழமன்னனுடைய