பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பெரிய புராண விளக்கம்

கண்-கண்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். எதிர்-எதிரில். ஏ: அசைநிலை. அணி-அலங்காரம் செய்யப் பெற்ற வீதிதிருவாரூர்த் தெருவில். மழ-இளமையைப்பெற்ற விடை மேல்-இடப வாகனத்தின்மேல். விண்ணவர்கள்-தேவலோ கத்திலிருந்து தேவர்கள். தொழி-தன்னை வணங்கும் வண் னம். விதிவிடங்கப் பெருமான் நின்றான்-வீதிவிடங்கப் பெருமானாகத் தியாகேசன் எழுந்தருளி வந்து நின்றான்.

அடுத்து வரும் 46-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தன்னுடைய சடாபாரத்தின் ஒரு பக்கத்தில் இளைய பிறைச்சந்திரனும், தனியான கண்ணையுடைய அழகிய நெற்றியும், வாமபாகத்தில் உமாதேவியும், எந்தப் பக்கங் களிலும் பூதகணங்களும் தன்னுடைய பக்கத்தில் நெருங்கி யிருக்கும் பெருமையைப் பெற்ற வீதிவிடங்கப் பெருமானைத். தன் முன்னால் தரிசித்து மனுநீதிச் சோழமன்னன் வாழ்த்துக் களைச் சொல்லி வணங்க, இடப வாகனத்தின்மேல் எழுந் தருளியிருக்கும் அந்தப் பெருமானும் பகைவர்களைப் போரில் வெல்லும் வெற்றியைப் பெற்ற அந்தச் சோழமன்ன னுக்குத் தன்னுடைய திருவருளை வழங்கினான். பாடல் வருமாறு: -

"சடைமருங்கில் இளம்பிறையும்

தணிவிழிக்கும் திருநுதலும் இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம் புடைநெருங்கும் பெருமையும்முன்

கண்டரசன் போற்றிசைப்ப விடைமருவும் பெருமானும் -

விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.' சடை-தன்னுடைய சடாபாரத்தில். மருங்கில்-ஒரு பக்கத்தில். இளம்பிறையும்-இளைய பிறைச் சந்திரனையும். தனி-தனியாக. விழிக்கும்-ஒரு கண் விழித்துப் பார்க்கும். திரு.அழகிய நுதலும்-நெற்றியையும். இடமருங்கில்