பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பெரிய புராண விளக்கம்

'பூத நாதனைப் பூம்புக லூரனை.', 'பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்.', 'பூத நாயகன். , 'பெரும் படைப் பூதநாதன்.” பூதநாயகன் பொற்கயிலைக் கிறை.', 'படையும் பூதமும்.’’, பூதநாதன் புலியத ளாடையன்.", "பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. , 'ஆதிரை நாயகன் யூத நாயகன்.’’, 'பூதங்கள் சூழப் புலித் தோல் வீக்கி. , 'பலயூ தத்தர் பாடல்.’’, 'பூதப்படை யுடையார்.’’, 'புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட.’, :பூதப்படையாய் புனிதா போற்றி.', 'பூதகணநாதன் காண்.’’, 'பூதப் படையான் புனிதர் போலும்.’’, :பாரிடங்கள் உடன்பாட்.', 'பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'பாரிடமும் பாதம் போற்ற.. , ' புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூதா தனை.’’ என்று சுந்தரமூர்த்தி நாயனா ரும் பாடியருளியவற்றைக் காண்க. : w அடுத்து வரும் 47-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த நிலையில் தன்னுடைய உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து போன பசுமாட்டினுடைய கன்றுக்குட்டியும், அந்த மனுநீதிச் சோழனுடைய புதல்வனும், அவனுக்குப் பிறகு மன்னனாகும் உரிமையைப் பெற்ற ஒப்பற்ற கன்றுக்குட்டி யைப் போன்றவனும் ஆகிய இளைஞனும் தன்னுடைய உயிரை விட்டுவிட்ட அமைச்சனும் ஒருங்கே தங்களுடைய உயிர்களை மீண்டும் பெற்று எழுந்தவுடன் மனுநீதிச் சோழ னும் தான் இத்தகையஇயல்புடையவன் ஆனான் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை; யாவருக்கும் முதல்வனாகிய சிவ பெருமானே முன்னால் நிற்பாணானால் நிறைவேறாத செயலும் இருக்கிறதோ? பாடல் வ்ருமாறு : . . . அந்நிலையில் உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன்

மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன்எழலும். இன்னபரிசானான் என் றறிந்திலன்வேக் தனும் - - - யார்க்கும் முன்னவனே முன்கின்றால் முடியாத பொருள் உளதோ!'