பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 287

அந்நிலையில்-விதிவிடங்கப் பெருமான் தன்னுடைய திருவருளை வழங்கிய அந்த நிலையில். உயிர் பிரிந்த-தன்னு டைய உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து போன. ஆன்-பசு மாட்டினுடைய கன்றும்-கன்றுக் குட்டியும். அவ்வரசன்அந்த மனுநீதிச் சோழ மன்னனுக்கு. மன்-பிறகு மன்னன் ஆகும். உரிமை-உரிமையைப் பெற்ற த்:சந்தி. தனிஒப்பற்ற க்:சந்தி. கன்றும்-கன்றுக்குட்டியைப் போன்ற இளவரசனும். மந்திரியும்-தன்னுடைய உயிரை விட்டு விட்ட அமைச்சனும், உடன்-ஒருங்கே. எழலும்-தங்க |ளுடைய உயிர்களை மீண்டும் பெற்று எழுந்தவுடன். வேந்த னும்-மனுநீதிச் சோழ மன்னனும். இன்ன-இத்தகைய. பரிசு ஆனான்-இயல்பைப் பெற்றவன் ஆனான். என்று-என. அறிந்திலன் தெரிந்து கொள்ளாத இன்ப மயக்கத்தில் இருந் தான். யார்க்கும்.எல்லோருக்கும். முன்னவனே-முதல்வ். னாக விளங்கும் சிவபெருமானே. முன் நின்றால்-ஒரு காரி யத்தை நிறைவேற்றுவதற்கு முன்வந்து நின்றால், முடி யாத-நிறைவேறாத, பொருள்-காரியம் ஏதேனும், உளதோ-இருக்கிறதோ? இடைக்குறை. இல்லை. என்ற படி. இது வேற்றுப் பொருள் வைப்பணி. - இளைஞனுக்குக் கன்றுக்குட்டி உவமை: "தெருட்கலை ஞானக் கன்றும்.’’, 'புண்ணியக் கன்றனையவர். ,

தெய்வஞானக் கன்றினை. ’’, கண்டகவு னியக்கன்றும்.',. மழவிடையிளங் கன்றொன்று." என்று பெரிய புராணத். தில் வருவனவற்றைக் காண்க: , , , a- . . . . . . .

பிறகு உள்ள 48-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தன்னுடைய திருவடிகளை வணங்கிய அழகிய புதல் வனைத் தன்னுடைய மார்பில் அணையுமாறு தன்னுடைய கைகளில் எடுத்துத் தழுவிக் கொண்டு நீண்ட நேரம் மகிழ்ச் சியை அடைந்து போக்குவதற்கு அருமையாக இருந்த சோழ மாநிலத்தை ஆட்சி புரியும் மனுநீதிச் சோழ மன்னன் தன்னு: "டைய துயரத்தைப் போக்கிவிட்டான்; தன்னுடைய மடியி