பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.288 பெரிய புராண விளக்கம்

விருந்து சுரந்து பொழிந்த இனிய பாலை ஒடிவரும் கன்றுக் குட்டி மகிழ்ச்சியை அடைந்து குடித்துத் தரை நனையுமாறு வரும் பசுமாடும் தன்னுடைய துன்பத்திலிருந்து விடுபட் .டது. பாடல் வருமாறு:

'அடிபணிந்த திருமகனை ஆகமுற எடுத்தணைத்து

நெடிதுமகிழ்ங் தருந்துயரம் நீங்கினான் கிலவேந்தன்: மடிசுரங்து பொழிதீம்பால் வரும்கன்று மகிழ்ந்துண்டு படிகனைய வரும்பசுவும் பருவரல்நீங்கியதன்றே.

அடி-தன்னுடைய திருவடிகளை, ஒருமை பன்மை மயக் கம். பணிந்த-வணங்கிய திரு-அழகிய. மகனை-தன்னு டைய புதல்வனை. ஆகம்-தன்னுடைய மார்பில் உறஅணையுமாறு. எடுத்து-தன்னுடைய கைகளில் எடுத்து. அனைத்து-தழுவிக் கொண்டு. நெடிது-நீண்ட நேரம். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. அரும்-போக்குவதற்கு அருமையாக இருக்கும். துயரம்-தன்னுடைய துயரத்தை. நில-சோழமாநிலத்தை. வேந்தன்-ஆட்சிபுரியும் மனுநீதிச் சோழமன்னன். நீங்கினான்-போக்கிவிட்டான். மடி-தன் னுடைய மடியிலிருந்து. சுரந்து பொழி-சுரந்து பொழிந்த. தீம்-இனிய சுவையைப் பெற்ற. பால்-பாலை. வரும்அந்தப் பசுமாட்டினிடம் ஓடிவரும். கன்று-கன்றுக்குட்டி. மகிழ்ந்து-பெருமகிழ்ச்சியை அடைந்து. உண்டு-குடித்து. படி-தரை. நனைய-ஈரமாகும் வண்ணம். வரும்-ஓடிவரும், பசுவும்-பசுமாடும். பருவரல்-தன்னுடைய துன்பத்திலிருந்து நீங்கியது-விடுபட்டது. அன்று, ஏ:இரண்டும் ஈற்றசை நிலைகள்.

அடுத்து உள்ள 49-ஆம் பாட்டின் கருத்து வருமாறு: தங்கத்தைப் பதித்து விளங்கும் திருமதில் சூழ்ந்த திரு வாரூரில் விளங்கும் பூங்கோயிலில் வீற்றிருந்தருளும் தலைவ னாகிய தியாகராசப் பெருமான் போரில் பகைவர்களை வன்ற வெற்றியைப் பெற்ற மனுநீதிச் சோழ மன்னனுக்குத் .திருவாரூரில் உள்ள ஒரு தெருவில் தன்னுடைய திருவருளை