பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு . 289

வழங்கிவிட்டுப் போயருளும் பெருமையைப் பெற்ற கருணை யினுடைய இயல்பைப் பார்த்துத் தன்னுடைய அடியவர் களுக்கு எந்தக் காலத்திலும் எளியவனாக எழுந்தருளி வரும் பெருமையை ஏழு உலகங்களிலும் வாழும் மக்கள் மேலாக எடுத்துத் துதிப்பார்கள். பாடல் வருமாறு:

"பொன்தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான் வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச் சென்றருளும் பெருங்கருணைத் திறம்கண்டு தன்

அடியாாக கென்றும்எளி வரும்பெருமை ஏழுலகும்

- எடுத்தேத்தும்.' பொன்-தங்கத்தைப் பதித்து. தயங்கு-விளங்கும் மதில்-திருமதில் சூழ்ந்த ஆரூர்-திருவாரூரில் உள்ள ப்: சந்தி. பூங்கோயில்-பூங்கோயில் என்னும் ஆலயத்தில். அமர்ந்த-வீற்றிருந்தருளியுள்ள. பிரான்-உபகாரியாகிய

தியாகராஜப் பெருமான். வென்றி-போரில் வெற்றியைப் பெற்ற. மனுவேந்தனுக்கு-மனுநீதிச் சோழ மன்னனுக்கு. வீதியிலே-ஒரு தெருவிலேயே. அருள்-தன்னுடைய திரு வருளை. கொடுத்து-வழங்கி. ச்: சந்தி. சென்றருளும்போயருளும். பெரும்-பெருமையைப் பெற்றிருக்கும். கருணை-கருணையினுடைய. த்:சந்தி. திறம்-இயல்பை, 'ஆற்றலை எனலும் ஆம். கண்டு-பார்த்து. தன்-தன்னு டைய. அடியார்க்கு-அடியவர்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். என்றும்.எந்தக் காலத்திலும். எளிவரும்-எளியவ -னாக எழுந்தருளி வரும். பெருமை-பெருமையை. ஏழ்-ஏழு. உலகும்-உலகங்களில் வாழும் மக்களும்; இட ஆகுபெயர். உலகு:ஒருமை பன்மை மயக்கம். எடுத்து-மேலாக எடுத்துப் பாராட்டி. ஏத்தும்-துதிப்பார்கள்; ஒருமை பன்மை

、LÉ臣f岳芯L0。 -

அடுத்து வரும் 50-ஆம் பாடல் திருநகரச் சிறப்பில் உள்ள இறுதிப் பாடல். அதன் கருத்து வருமாறு: -

பெ-19 .