பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பெரிய புராண விளக்கம்

'இத்தகைய விதத்தில் தரும வழியில் கணக்கைக் கடந்த மக்களுக்குத் தன்னுடைய திருவருளை விரும்பி வழங்கி எல் லாத் தேவர்களுக்கும் முதல்வராகிய அந்தத் தியாகராஜப் பெருமானார் மகிழ்ச்சியை அடைந்து தம்முடைய திரு. வருளை வழங்கும் பேற்றைப் பெற்றிருப்பதாகிய பழைய தலத்தின்மேல் அடியேன் வனைந்து பாடும் பாடல்கள் எம் முடைய அளவுக்குள் பாடுவதாகும் இயல்பைப் பெற்றதோ? அத்தகைய திருவாரூருக்கு இதயதாமரை மலராக விளங்கும், தருமங்களின் வடிவமான வன்மீகநாதர் எழுந்தருளியுள்ள பூங்கோயில் என்னும் ஆலயம். பாடல் வருமாறு:

"இணையவகை அறநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்

. - புரிந்து முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல் புனையும்உரை நம்மளவில் புகலலாம் தகைமையதோ?. அணையதனுக்ககமலராம் அறவனார் பூங்கோயில்.’

இணைய-இத்தகைய வகை-விதத்தில். அற நெறியில்தரும வழியில், எண்-கணக்கை. இறந்தோர்க்கு-கடந்த தம்முடைய பக்தர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். அருள்-தம்முடைய திருவருளை. புரிந்து-விரும்பி வழங்கி. முனைவர்-எல்லாத் தேவர்களுக்கும் முதல்வராகிய. அவர் அந்தத் தியாகராஜப் பெருமானார். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. அருள-திருவருளை வழங்க. ப்:சந்தி. பெற்றுஅதைப் பெரிய பாக்கியமாக அடைந்து, உடைய-புகழை உடையதாகிய பெயரெச்ச வினையாலணையும் பெயர், மூதூர்மேல்-பழைய தலத்தின்மேல். புனையும்-வனையும். உரை-பாடல்கள்; ஒருமை பன்மை மயக்கம். நம்-எம் முடைய; இது சேக்கிழார் தம்மைக் குறித்தது. அளவில்அறிவின் அளவுக்குள். புகலலாம்-பாடுதலாகும். தகைமை யதோ-தன்மையைப் பெற்றதோ? பெற்றதன்று என்பது கருத்து. அணையதனுக்கு-அத்தகைய திருவாரூருக்கு. அக.