பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு - 19.

களாகிய திருநீற்றையும் உருத்திராட்ச மாலையையும் அணிந்து கொண்டார். - - *

சிதம்பரம் திருக்கோயிலில் விளங்கும் ஆயிரக் கால் மண்டபத்துக்குச் சேக்கிழார் எழுந்தருளி வந்து நடராஜப் பெருமானுடைய திருவருளையும் திருவடிகளையும் தியானித்துவிட்டு அமர்ந்துகொண்டு பெரிய புராணத் தைப் பாடத் தொடங்கினார். அசரீரி வாக்காகக் கேட்ட, 'உலகெலாம்' என்பதை முதலில் வைத்து அந்தத் தொண்டர் புராணத்தைப் பாடியருளலானார்.

அந்தணர்களாகிய நாயன்மார்களின் புராணங்கள் பதின்மூன்று, சிவாசாரியர்களாகிய ஆதிசைவர்களின் புரானங்கள் இரண்டு, அமைச்சராகிய நாயன்மார்களின் புராணம் ஒன்று, முடிமன்னர்களாகிய திருத்தொண்டர் களின் புராணங்கள் ஆறு, சிற்றரசர்களாகிய நாயன் மார்களின் புராணங்கள் ஐந்து, வணிகர்களாகிய தொண்டர்களின் புராணங்கள் ஐந்து, உழுதுண்போர் உழுவித்துண்டோர் என்னும் இரண்டு வகை வேளாளர் களாகிய நாயன்மார்களின் புராணங்கள் பதின்மூன்று, இடைக்குலத்தில் உதித்த நாயன்மார்களுடைய புராணங் . கள் இரண், டு, சாலியர், குலாலர், எண்ணெய் வாணிகர், மீனவர், சான்றார், ஆடை வெளுப்பவர், வில்வீரர், இழிந்த குலத்தவர், பாணர் ஆகிய குலங்களில் தோன்றி யவர்களின் புராணம் ஒவ்வொன்று ஆகிய இவற்றைப் பெரியபுராணத்தில் வைத்துப் பாடலானார். . -

வரையறையாக இன்ன குலத்தில் தோன்றியவர் என்று தெரியாத நாயன்மார்களின் புராணங்கள் பதின்மூன்று, தொண்டர்களுடைய திருக்கூட்டத்தில் உள்ளவர்களில் அவர்கள் பிறந்த ஊர்கள் இன்னவென்று தெரிந்து கொண்ட நாயன்மார்களின் புராணங்கள் இரண்டு, பிறந்த குலம் தெரிந்த நாயன்மார்களின் புராணங்கள்

இரண்டு, பெயர் தெரிந்த நாயனார் புராண்ம் ஒன்று,