பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெரிய புராண விளக்கம்

பிறந்த குலம் இன்னதென்று அறிந்து கொள்ள முடியாத நாயன்மார்களினுடைய புராணங்கள் ஏழு, பிறந்த ஊர்கள் தெரியாத நாயன்மார்களின் புராணங்கள் ஏழு, பெயர் தெரியாத நாயன்மார்களின் புராணங்கள் எட்டு, இறுதி யில் இஇத்தனை பேர்கள் என்று தொகை தெரிந்த திருக்கூட்டத்தின் புராணம் ஒன்று, கணக்கு இத்தனை என்று தெரியாத திருக்கூட்டத்தின் புராணங்கள் எட்டு என்று புராணங்களை வைத்துச் சேக்கிழார் பாடலானார். தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள், குங்கிலயக் கலய நாயனார், முருக நாயனார், உருத்திர பசுபதி நாயனார், சிறப்புலி நாயனார், கணநாத நாயனார், சண்டேச நாயனார், சோமாசி மாற நாயனார், நமிநந்தி யடிகள் நாயனார், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், அப்பூதியடிகள் நாயனார், நீல நக்க நாயனார் ஆகிய நடராஜப் பெருமானுடைய திருவருட் செல்வத் தைப் பெற்ற அந்தணர்களினுடைய புராணங்கள் பதின்மூன்று, சிவாசாரியர்களாகிய நாயன்மார்களின் புராணங்கள் இரண்டு, புகழ்த்துணை நாயனார், முப்போதும் திருமேனி தீண்டுவார் நாயனார், சிவபெருமானை அருச்சிப்பவர்களாகிய நாயன்மார்கள், அமைச்சர் மரபில் தோன்றிய சிறுத்தொண்ட நாயனா ராகிய ஒருவர், முடிசூடும் மன்னர்களாகிய ஆறு நாயன்மார் கள் என்பவர்களுடைய புராணங்களைப் பாடலானார். அந்த முடிமன்னர்கள் யாவரெனின், கோச்செங்கட் சோழ நாயனார், புகழ்ச்சோழ நாயனார்.பாண்டியமன்னனுடைய பட்டமகிஷியாராகிய மங்கையர்க்கரசியார், இடங்கழி நாயனார், நின்ற சீர் நெடுமாற நாயனார், சேர மன்னர், சிற்றரசர்களாகிய நரசிங்கமுனையரையர், கூற்றுவ நாயனார், கழிற்சிங்க நாயனார், மெய்ப்பொருள் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய இந்த நாயன் மார்களுடைய புராணங்களையும் பாடலானார். வணிகர் குலத்தில் தோன்றிய ஐந்து நாயன்மார்களாகிய காரைக்