பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு

பெரிய புராணத்தில் 4 ஆவதாக உள்ளது திருக்கூட்டச் சிறப்பு. அதில் வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு:

"பூதங்களுக்குத் தலைவரும், பாம்புப் புற்றைத் தாம் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டவரும், எல்லாத் தேவர்களுக்கும் முதல்வராகிய மகாதேவரும் ஆகிய வன்மீக நாதர் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருவாரூரில் விளங்கும் ஆலயமாகிய பூங்கோயிலில் ஒளி வெள்ளம் வீசும் பெருமை யைப் பெற்ற மாணிக்கங்களின் நீளமான பிரகாசம் வீசும் முற்றத்தைச் சூழ்ந்துள்ள பழைய திருமதிலை யடுத்த அழகிய திருவாசலுக்கு முன்னால் விளங்குவது. பாடல் வருமாறு: 'பூத நாயகர் புற்றிடம் கொண்டவர்

ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற் சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ் மூதெயில்திரு வாயில்முன் னாயது. ’’ இது தேவாசிரய மண்டபத்தைப் பற்றிக் கூறும் பாடல்: பூத-பூதகணங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவரும். புற்று-பாம்புப் புற்றை. இடம்தாம் எழுந்தருளியிருக்கும் இடமாக. கொண்டவர்-கொண்ட