பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 295

வன்மீக நாதரும். ஆதி-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய, தேவர்-மகாதேவரும் ஆகிய வன்மீகநாதர். அமர்ந்த-விரும்பி எழுந்தருளியிருக்கும்; கால மயக்கம். பூங்கோயில்லில்-திருவாரூரில் விளங்கும் ஆலயமாகிய பூங் கோயிலில். சோதி-ஒளி வெள்ளத்தை வீசுவதும். மாபெருமையைப் பெற்றதும். மணி-மாணிக்கங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நீள்-நீண்ட சுடர்-ஒளி வீசு வதும் ஆகிய முன்றில்-ஆலயத்தின் முற்றத்தை; முன் றில்-இல்முன்; முன்பின்னாகத் தொக்க தொகை. சூழ்சூழ்ந்திருக்கும். மூதெயில்-பழமையான திருமதிலை அடுத்து. திருவாயில்-ஆலயத்தின் அழகிய கோபுர வாச லுக்கு. முன்-முன்னால். ஆயது-இருப்பது. -

பூதநாயகர் இந்தக் கருத்தைப் புலப்படுத்தும் இடங்களை முன்பே ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. ஆதி தேவர்: இந்தக் கருத்தைப் பற்றி உள்ள இடங்களையும் முன்னரே ஒரிடத்தில் தெரிவித்தோம்; அங்குக் கண்டுணர்க.

பிறகு உள்ள 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் நான்கு திசை களைப் பார்க்கும் முகங்களைப் பெற்ற பிரமதேவன், தேவர் களினுடைய அரசனாகிய இந்திரன், செந்தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் திருமகள் வாழும் மார்பைக் கொண்ட திருமால் முதலிய தேவர்கள் ஆகியவர்களும் இடைவிடாமல் எந்தத் தேவர்களும் நிறைய இருந்து தங்கியிருப்பது தேவாசி ரயன் என்னும் பெயரைப் பெற்ற அழகிய காவணம்.” பாடல் வருமாறு: - -

'பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை

மாவாழ் அகலத்து மால்முதல் வானவர் ஒவா தெவரும் நிறைந்துறைந்துள்ளது தேவா சிர்யன் எனும்திருக்காவணம்.”