பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பெரிய புராண விளக்கம்

பூ-தாமரை மலரில். ஆர்-அமர்ந்திருக்கும். திசைகிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசை களையும் பார்க்கும்; ஒருமை பன்மை மயக்கம். முகன்முகங்களைப் பெற்ற பிரமதேவன்; ஒருமை பன்மை மயக்கம். இந்திரன்-தேவர்களினுடைய அரசனாகிய இந்திரன். பூமிசை-செந்தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும். மாதிருமகள். வாழ்-வாழும். அகலத்து-திருமார்பைக் கொண்ட மால்-திருமால். முதல்-முதலிய. வானவர்தேவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஒவாது-இடை விடாமல். எவரும்-எந்த வகையான தொண்டர்களும்; ஒருமை பன்மை மயக்கம். நிறைந்து-கூட்டமாக நிரம்பி. உறைந்து-தங்கி உள்ளது-இருக்கும் இடம். தேவாசிரயன் எனும்-தேவாசிரயன் என்னும் பெயரோடு விளங்கும்; இடைக்குறை. திருக்காவணம்-அழகிய காவணம். காவணம்பெரிய கல் தூண்கள் அமைந்த மேற்கட்டி இல்லாத பந்தல். தேவாசிரயன்-தேவர்களால் ஆசிரயக்கப்படுவது.

பிறகு வரும் 3-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

துன்பத்தைப் போக்கும் சிவபெருமானுடைய அடியவர் களின் திருமேனிகளின்மேல் முழுவதும் பூசிய விபூதி வீசும் பிரகாசத்தாலும், அவர்களிடம் நிரம்பியிருக்கும் பரிசுத்தத் தாலும், அவர்கள் பாதுகாத்து உச்சரிக்கும் ந, ம, சி, வா, ய என்னும் பஞ்சாட்சரத்தினுடைய ஒலி விளங்குவதாலும், பரவியிருக்கும் ஆயிரம் பாற்கடல்கள் அலைகளை எழுப்புவத னால் எழும் ஒலியைப் போலக் கேட்கும் இடம் அந்தத் தேவாசிரயன் என்னும் காவணம்.” பாடல் வருமாறு:

'அரங்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்

கிரந்த ற்ேறொளி யால்நிறை தூய்மையால் புரந்த அஞ்செழுத் தோசை பொலிதலால் பரந்த ஆயிரம்பர்ற்கடல் போல்வது.'