பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 301

நடுக்கத்தைப் பெற்ற திருவுள்ளங்களைக் கொண்டவர்கள். தங்களுடைய கைகளால் பல வகையான திருத்தொண்டு களைப் புரியும் கடமையை மேற்கொண்டவர்கள்; இத் தகைய இயல்புகளைப் பெற்றவர்கள் அல்லாமலும் வேறு கணக்கில்லாத தொண்டர்கள் ஆகிய யாவரும் அந்தத் தேவாசிரயன் என்னும் காவணத்தில் இருந்தார்கள்.” பாடல் வருமாறு :

அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்

மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிங்தையார்

கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்

இத்தி றத்தவர் அன்றியும் எண்ணிலார்.'

அத்தர்-தந்தையாரைப் போன்றவராகிய வன்மீக

நாதர். வேண்டி-தாமே விரும்பி. முன்-முன்பு. ஆண்ட வர்-ஆட்களாகக் கொள்ளப் பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அன்பினால்-பக்தியினால். மெய்-உண்மை பேசு வதில். த்:சந்தி. தழைத்து-தழைப்பை அடைந்து. விதிர்ப் புறு-என்ன அபசாரம் நேர்ந்துவிடுமோ என்று நடுக்கத்தை அடையும். சிந்தையார்-திருவுள்ளங்களைப் பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கை-தங்களுடைய கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். த் சந்தி. திருத்தொண்டு-பல வகையான திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். அந்தத் திருத்தொண்டுகளாவன: ஆலயத்தைப் பெருக்கி மெழுகிக் கோலம் போட்டு வைத்தல், பக்தர்களை அழைத்து வந்து வன்மீக நாதரைத் தரிசனம் செய்ய உதவுதல், அவர் களுக்குப் பிரசாதங்களை வழங்குதல் முதலியவை. கெய்ட புரியும். கடப்பாட்டினார்-கடமையை மேற்கொண்டவர் கள்; ஒருமை பன்மை மயக்கம். இத் திறத்தவர்-இத்தகைய இயல்புகளைப் பெற்றவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். அன்றியும்-இவர்களை அல்லாமலும். எண்-கணக்கு.இலார்- . இல்லாத தொண்டர்களும் அந்தத் தேவாசிரயன் என்னும்