பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பெரிய புராண விளக்கம்

தொல்-பழைய புகழார்தம்-புகழ்களைப் பெற்றவர் களுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம் : அகைநிலை. நிலைமையை-சிறப்பான நிலையை. என்-என்ன வகையில், அறிந்து-தெரிந்து .ெ க | ண டு ஏத்துகேன்-அடியேன் துதிப்பேன். இது சேக்கிழார் தம்மைக் குறித்தது.

இந்தத் திருக்கூட்டச் சிறப்பில் இறுதியில் உள்ள 11-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

இத்தகைய பெருமையைப் பெற்றவர்களாகிய தவசி களினுடைய திருக்கூட்டத்தை அடியேங்களுடைய தலைவ. னும், முடிவு இல்லாத புகழைப் பெற்றவனும், ஆலால சுந்த ரனும் ஆகிய சுந்தரமூர்த்தி பாடியருளிய அழகான திருத் தொண்டத் தொகை என்னும் செந்தமிழ்த் திருப்பதிகத்தைத் திருவாரூருக்கு எழுந்தருளி வந்து பாடியருளியவாறு பாடுவோம் o

பாடல் வருமாறு:

இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்

அந்தம் இல்புகழ் ஆலால் சுந்தரன் சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ் வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.' இந்த-இத்தகைய சிறப்புகளைப் பெற்ற. மா-பெரு, மையை உடைய தவர்- தவசிகளாகிய திருத்தொண்டர் களினுடைய ஒருமை பன்மை மயக்கம். கூட்டத்தைதி ரு க் கூட்ட த் ைத . எம்பிரான்-அடியேங்களுடைய தலைவனும். அந்தம்-முடிவு. இல் இல்லாத கடைக்குறை, புகழ்-புகழைப் பெற்றவனும்; திணைமயக்கம், ஆலால சுந்தரன்-ஆலாலசுந்தரனும் ஆகிய சுந்தர மூர்த்தி. சுந்தரஅழகைக் கொண்ட த்: சந்தி. திருத்தொண்டத் தொகைதிருத் தொண்டத் தொகை என்னும். தமிழ்செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகத்தை; ஆகு பெயர். வந்து-திருவாரூருக்கு எழுந்தருளி. பாடிய வண்ணம்பாடியருளியவாறே. உரைசெய்வாம்-யாம் பாடுவோம்; இதுசேக்கிழார் கூற்று.