பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 311 ஆரம்-அந்தத் தொண்டர்கள் அணிந்து கொள்ளும் மாலை. கண்டிகை-உருத்திராக்க மணிமாலையே. ஆடை யும்-அவர்கள் உடுக்கும் உடையும். கந்தையே-கந்தல் துணியே. பாரம்-அவர்கள் தாங்கும் பொறுப்பு. ஈசன்பரமேசுவரனாகிய வன்மீகநாதனுடைய. பணி-திருப் பணியை. அலது-அல்லாமல்; இடைக்குறை. ஒன்றுவேறு ஒன்றும். இலார்-இல்லாதவர்கள்; ஒருமை பன்மை மயக்கம்; இடைக்குறை. வீரம்-அந்தத் தொண்டர்களுடைய வீரம். என்னால்-அடியேனால். இது சேக்கிழார் தம்மைக் குறித்துக் கூறியது. விளம்பும்-பாடும். தகையதோதகுதிக்குள் அடங்கியதோ, - - - வீரம்; புலனைந்தும் வைன்றான்தன் வீரமே வீரம்' என வருதலைக் காண்க. -

அடுத்து வரும் 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அந்தத் தொண்டர்கள் தாங்கள் வேண்டிய வண்ணம் விருப்பத்தோடு எடுத்துக் கொள்ளும் வேடங்களை உடைய வர்கள்; ஆனந்தத்தாண்டவம் புரிந்தருளும் பெருமானாகிய, தியாகேசனுடைய ஒப்பற்ற திருத்தொண்டர்கள்; நெடுங் காலமாக விளங்கும் பழைய புகழைப் பெற்றவர்கள்; அவர்களுடைய சிறந்த நிலையை இவ்விடத்தில் வாழ்த்து கிறேன்; எதைத் தெரிந்து கொண்டு துதிப்பேன்?’ பாடல் வருமாறு :

வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்;

தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள்; நீண்ட தொல்புக ழார்தம் நிலைமையை ஈண்டு வாழ்த்துகேன் என்னறிங் தேத்துகேன்.” வேண்டுமாறு-அந்தத்தொண்டர்கள்தாங்கள் வேண்டிய

வண்ணம். விருப்புறும்-விருப்பத்தோடு எடுத்துக் கொள்ளும். வேடத்தர்-வேடங்களை உடையவர்கள்; ஒருமை பன்மை மயக்கம், தாண்டவ-ஆனந்தத்தாண்டவம் புரிந்தருளும். ப்: சந்தி. பெருமான்-பெருமானாகிய

தியாகேசனுடைய.தனி-ஒப்பற்ற த்:சந்தி. தொண்டர்கள். திருத்தொண்டர்கள். நீண்ட-நெடுங்காலமாக விளங்கும்,